கவர்ச்சி புயலாக மாறிய கீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

37441

கீர்த்தி சுரேஷ்..

நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை தன்னுடைய இணைய பக்கங்களில் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ் பிற நடிகைகள் போல நான் என்னுடைய தோலை காட்டி நடிக்க மாட்டேன். ஸ்கின் ஷோ தான் கவர்ச்சி என்று நான் நம்பவில்லை என்று கூறியிருந்தார்.

ஆனால் தற்போது மற்ற கதாநாயகிகளை போலவே கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்திருக்கிறார். அதன்படி இவர் வெளியிடக்கூடிய கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆவது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில் கருப்பு நிற முண்டா பனியன் வெள்ளை நிற பேண்ட் அணிந்து கொண்டு குறிப்பான சில புகைப்படங்களை பதிவு செய்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ந்துபோய் கிடைக்கின்றனர்.

தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் கீர்த்தி சுரேஷ் அது நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதன்பிறகு இவர் நடித்த படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.


நடிகர் விஜய்க்கு ஜோடியாக சர்க்கார் திரைப்படத்தில் நடித்திருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த திரைப்படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்களால் கடுமையாக கலாய்க்கப்பட்டது. எதற்காக இந்த படத்தில் இவர் இருக்கிறார்..? இவருடைய கதாபாத்திரத்திற்கும் கதைக்கும் என்ன சம்பந்தம்..? என்று கேள்வி எழுப்பி படத்தின் இயக்குனர் முருகதாஸையும்… நடிகை கீர்த்தி சுரேசையும் பங்கம் செய்தனர் நெட்டிசன்கள். இந்த படம் தோல்வியைத் தழுவியது.

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் குடும்ப பாங்கான வேடங்களில் நடித்து வந்தார். தற்போது படவாய்ப்புகள் குறைந்து விட்ட நிலையில் கவர்ச்சி கதாநாயகியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பட வாய்ப்புக்காக கவர்ச்சியாக நடிக்கவும் தயார் என்று கூறி வருகிறாராம் அம்மணி.

அதற்கு சான்றாக நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான சர்க்காரு வாரி பாட்டா என்ற திரைப்படத்திலும் நடிகர் நிதின் ரெட்டி நடிப்பில் வெளியான ரங்க்தே என்ற திரைப்படத்திலும் படுமோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார். எனவே தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் கிளாமர் தரிசனத்தை அடுத்தடுத்த படங்களில் பார்க்கலாம் என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.