காசியில் கருடன் பறக்காது என்பது தெரியும்..! தமிழ் நாட்டில் காகம் பறக்காத ஊர் எது தெரியுமா?

404

தமிழ் நாட்டில்….

தமிழ் நாட்டில் ஏராளமான அதிசயங்கள் உண்டு.வெளியில் தெரியாத பல ரகசியங்களும் உண்டு.

அந்த வகையில் ஒன்றுதான் இந்த செய்தியும்!

தமிழ் நாட்டில் உள்ள கோடை வெயிலுக்கு தப்பிக்க அவரவர் வசதிக்கேற்ப ஒரு சுற்றுலா தலங்களுக்கு போவதுண்டு.அப்படி போகும் ஊட்டி,கொடைக்கானல், ஏற்காடு,ஏலகிரி,கொல்லிமலை,டாப் சிலிப் இன்ன பிற இடங்களில் காக்கா தாராளமாக பறப்பதை பலரும் பார்த்திருக்க கூடும்.

காக்கா பறக்காத ஒரு ஊர் இருக்கிறது.அதுதான் தேனி மாவட்டத்தில் உள்ள ‘மேகமலை’.இதுக்கு முன்னாள் நீங்கள் போய் வந்திருந்தால் ஒரு முறை ஃபிளாஷ் பேக் ஓடவிட்டுப் பாருங்க…ஒரு முறை கூட நீங்கள் காக்காவை பார்த்த வாய்ப்பே இருந்திருக்காது!


காலம் காலமாக அங்கே வாழ்ந்து வரும் மக்களும் காக்காவைப் பார்த்தில்லையாம்! அத்தி பூத்தார் போல் எப்போதாவது ஒரு காக்கா திசை மாறி பறந்ததை உள்ளூர் வாசிகள் சிலர் எப்போதோ பார்த்த நினைவிருக்கிறது என்று சொல்கிறார்கள்.

அதற்கு என்ன காரணம் என்று உள்ளூர் பெரியவர் ஒருவரிடம் கேட்டால், ‘அறிவியல் பூர்வமான காரணம் இருக்கலாம்…அதெல்லாம் நமக்கென்னப்பா தெரியும்!?’என்கிறார்.அவ்வப்போது சுற்றுலா சென்று வரும் ஆட்கள் இந்த அதிசயத்தை கவனித்திருக்க வாய்ப்பில்லை!

அடுத்த முறை போனால்,மறக்காமல் இந்த அதிசயத்தை கவனிக்க தவறவேண்டாம்!