காதலனுடன் சேர்ந்து பெண் இன்ஜினியரை கழுத்தை நெரித்து கொலை செய்த தங்கை!!

361

தெலங்கானாவில்..

தெலங்கானா மாநிலம் ஜகிர்த்தியாலாவை சேர்ந்தவர் தீப்தி (22), சாப்ட்வேர் இன்ஜினியர். கடந்த 28ம்தேதி இவரது பெற்றோர் வெளியூர் சென்றுவிட்டனர். தீப்தி மற்றும் அவரது தங்கை சந்தனா (20) ஆகிய இருவர் மட்டுமே வீட்டில் தனியாக இருந்தனர்.

மறுநாள் (29ம் தேதி) வீட்டில் மர்மமான முறையில் தீப்தி இறந்து கிடந்தார். அவரது தங்கை வீட்டில் இல்லை. அவர் மாயமானது தெரியவந்தது. வீட்டில் இருந்த 70 சவரன் நகைகள் மற்றும் ₹2 லட்சம் ரொக்கமும் மாயமானது.

இதுகுறித்த தகவலின்பேரில் ஜகிர்த்தியாலா போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். மேலும் தீப்தியின் உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பியிருந்தனர்.

இதன் அறிக்கை போலீசாரிடம் அளிக்கப்பட்டது. அதில் தீப்தி கழுத்து நெரித்து மூச்சுத்திணற வைத்து கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர். மேலும் மாயமான சந்தனாவை தேடிவந்தனர்.


இந்நிலையில் கொலை நடந்த அன்று ஜகிர்த்தியாலா பஸ் நிலையத்தில் மாயமான சந்தனா, வாலிபர் ஒருவருடன் நடந்துசென்று பஸ் ஏறும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவானது தெரிந்தது.

இதையடுத்து சந்தனா மற்றும் வாலிபரை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள ஆர்மூர் பகுதியில் சந்தானவும் வாலிபரும் தங்கியிருந்தது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் நேற்று பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் சந்தானவுடன் தங்கியிருந்தவர் அவரது காதலன் உமர்ஷேக் என்பது தெரிய வந்தது. அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

சந்தனாவும், ஐதராபாத்தை சேர்ந்த உமர்ஷேக் (21) என்ற வாலிபரும் கல்லூரிக் காதலர்கள். இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள் என்பதால் வீட்டில் இருந்து வெளியேறி சென்று திருமணம் செய்ய சந்தனா திட்டமிட்டிருந்தார்.

கடந்த 28ம்தேதி இரவு தனது காதலனுக்கு சந்தனா போன் செய்து, `இருவரும் திருமணத்தை தள்ளிப்போடக்கூடாது, விரைந்து திருமணம் செய்யலாம்’ எனக்கூறியுள்ளார். அதற்கு உமர்ஷேக், நம் இருவருக்கும் இன்னும் வேலை கிடைக்கவில்லை.

எனவே வேலைக்கு சென்று சிறிது சம்பாதித்துவிட்டு அதன்பின்னர் திருமணம் செய்யலாம் எனக்கூறியுள்ளார்.ஆனால் ஏற்க மறுத்த சந்தனா, தற்போது வீட்டில் பெற்றோர் யாரும் இல்ைல, உடனடியாக வந்தால் எனது அக்கா தூங்கியவுடன் நகை, பணத்துடன் வெளியேறி விடலாம் என அழைத்துள்ளார்.

இதையறியாத தீப்தி தூங்கச்சென்றுள்ளார். இதையறிந்த சந்தனா, உடனடியாக தனது காதலனை வீட்டுக்கு வரவழைத்துள்ளார். அவர் வந்தவுடன் வீட்டில் இருந்த 70 சவரன் நகை மற்றும் ₹2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தப்ப முயன்றனர்.

அப்போது சத்தம் கேட்ட தீப்தி, கண் விழித்தபோது தனது தங்கை வாலிபர் ஒருவருடன் நகை, பணத்துடன் வீட்டில் இருந்து வெளியேறுவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தங்கையிடம் கேட்டபோது, காதல் விவகாரம் ெதரிந்தது.

அதற்கு தீப்தி, `இந்த திருமணத்திற்கு நமது பெற்றோர் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். எனவே இருவரும் காதலை கைவிடுங்கள்’ எனக்கூறி நகை, பணத்தை அவர்களிடம் இருந்து பறிக்க முயன்றார். இதனால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த உமர்ஷேக், சந்தனா ஆகிய இருவரும் தீப்தியை சரமாரி தாக்கி அவரது துப்பாட்டாவால் அவரது கழுத்தை நெரித்து படுக்கையறையில் தள்ளியுள்ளனர்.  இதில் மூச்சுத்திணறி சிறிதுநேரத்தில் தீப்தி இறந்தார்.

தீப்தி இயற்கையாக இறந்ததுபோல் காண்பிக்க துப்பாட்டாவை அகற்றிவிட்டு ஷோபாவில் தீப்தியின் சடலத்தை வைத்துவிட்டு இருவரும் தப்பியது தெரிந்தது. இதையடுத்து போலீசார் காதல்ஜோடி இருவரையும் கைது செய்தனர்.

மேலும் கொலையாளிகளுக்கு அடைக்கலம் தந்த உமர்ஷேக்கின் தாய் சையத்அலியா, உறவினர் ஷேக்அசியாபாத்திமா, அபீஸ் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ₹1.20 லட்சம் பணம், 70 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

ஆத்திரமடைந்த உமர்ஷேக், சந்தனா ஆகிய இருவரும் தீப்தியை சரமாரி தாக்கி அவரது துப்பாட்டாவால் அவரது கழுத்தை நெரித்து படுக்கையறையில் தள்ளியுள்ளனர். இதில் மூச்சுத்திணறி சிறிதுநேரத்தில் தீப்தி இறந்தார்.