காதலிக்கு காஸ்ட்லி கிஃப்ட்.. இளைஞர் செய்த மோசமான செயல்.. சிக்கிய காதலியின் அக்கா!!

1057

மதுரை..

மதுரை மேலமாசி வீதி பகுதியில் பிரபல நகை கடையான பீமா ஜூவல்லர்ஸ் இயங்கி வருகிறது. இந்த நகைக்கடையின் கீழ்த்தளத்தில் கடந்த 13ம் தேதி காலை 10 மணிக்கு வழக்கம் போல கடையை திறந்து, நகைகளை சரிபார்த்த போது மொத்த நகையில் 10 சவரன் குறைந்தது தெரிய வந்தது.

இதனால் பதற்றம் அடைந்த ஊழியர்கள் மீண்டும் ஒருமுறை சோதனை செய்தனர். இதில் 10 சவரன் மதிப்பிலான செயின் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த மேலாளர் கார்த்திக் நகைக்கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை சோதனையிட்டார். நகைக்கடையின் கீழ்த்தளத்தில் கடையில் பணிபுரிந்து வந்த திருச்சியை சேர்ந்த அப்துல் பயாஸூக்கு இதில் தொடர்பு இருப்பது சிசிடிவி காட்சியின் மூலமாக தெரிய வந்தது.


அவர் 10 சவரன் எடையிலான தங்க செயினை எடுத்து விட்டு அதற்கு பதிலாக கவரிங் செயினை வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து காவல்துறையில் அளித்த புகாரின் பேரில், தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

நகைக்கடை ஊழியரான அப்துல் பயாஸ் மற்றும் அவரது காதலியின் அக்காவான திவ்யா ஆகிய இருவரையும் கைது செய்து திருடப்பட்ட நகையை மீட்டனர்.

திருடப்பட்ட தங்க நகையை தனது காதலியின் அக்காவான கோயம்பத்தூர் அன்னை சத்யா வீதியை சேர்ந்த திவ்யா என்பவரிடம் கொடுத்து அனுப்பியதும் தெரிய வந்தது.

அப்துல் பயாஸ் கோயம்புத்தூரைச் சேந்த பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில், ஆண்டு தோறும் காதலர் தினத்திற்கு அவருக்கு கிஃப்ட் கொடுத்து வந்துள்ளார்.

இந்த ஆண்டு நகையை பரிசாக கொடுக்கலாம் என திட்டமிட்ட அவர், திவ்யாவிடம் கடையில் இருந்த 10 பவுன் செயினை போட்டோ எடுத்து அனுப்பி கவரிங் செயின் தயார் பண்ண சொல்லி,

செயினை இடம் மாற்றியுள்ளார். அதே சமயம் பிப்ரவரி 14ம் தேதி தாத்தா இறந்து விட்டதாக கூறி விட்டு கடைக்கு லீவு போட்டு விட்டு சென்றதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.