காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு தப்ப முயன்ற காதலன்… அதிரடி காட்டிய இளம்பெண் : இறுதியில் நடந்த சம்பவம்!!

974

கடலூர்..

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சாத்துக்கூடல் கிராமத்தை சேர்ந்தவர் இளம்பெண் பாக்யலட்சுமி (23). இவர் சென்னையில் தங்கியிருந்து செல்போன் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவரும், சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும், விருத்தாசலம் அடுத்த பரவலூர் கிராமத்தை சேர்ந்த வினோத் என்பவரும் காதலித்து வருகின்றனர்.

பாக்யலட்சுமி- வினோத் ஆகியோர் 3 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இருவரும் சென்னையில் பல இடங்களுக்கு சுற்றியுள்ளனர். அப்போது தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளளர். இதனால் பாக்யலட்சுமி 5 மாத கா்ப்பமானார். இது பற்றி வினோத்திடம் பாக்யலட்சுமி தெரிவித்துள்ளார்.

கர்ப்பமானதால் உடனடியாக தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பாக்யலட்சுமி வற்புறுத்தினார். ஆனால் உல்லாசம் அனுபவித்த பிறகு, திருமணம் செய்ய வினோத் மறுத்துவிட்டார்.


அதோடு கருவை கலைத்து விடுமாறு கூறியுள்ளார். ஆனால் கருவை கலைக்க மறுத்த பாக்யலட்சுமி, நடந்த சம்பவம் குறித்து ஊரில் உள்ள தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சொந்த ஊருக்கு சென்ற பாக்யலட்சுமி தனது பெற்றோர் மூலம் விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையை தொடங்கிய போலீசார், முதற்கட்டமாக வினோத்தையும், அவரது பெற்றோரையும் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

காவல் நிலையத்தில் நடந்த விசாரணை, பேச்சுவார்த்தைக்கு பின் பாக்கியலட்சுமியை திருமணம் செய்து கொள்வதாக வினோத் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து இரு வீட்டார் உறவினர்கள் முன்னிலையில் எம். ஜி. ஆர். நகரில் உள்ள ஸ்ரீ வண்ணமுத்து மாரியம்மன் கோவிலில் உடனடியாக இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.