காதலித்து திருமணம் செய்த இளம் மனைவி… தினமும் கதவை சாற்றிக் கொண்டு கணவனை புரட்டி எடுத்த கொடுமை!!

511

ராஜஸ்தான்…

இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட பள்ளி ஆசிரியரை அப்பெண் அடித்து துன்புறுத்துவதாக அந்த தலைமை ஆசிரியர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இச்சம்பவம் ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிந்திக்க கூட நேரமில்லாமல் சுழன்று கொண்டிருக்கும் இவ்வையகத்தில் எங்கோ ஒரு மூலையில் விதவிதமான விசித்திர சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. ராஜஸ்தானில் நடந்த ஒரு சம்பவம் சுவாரசியமானதாகவும், வேடிக்கையான தாகவும் பாரிக்கப்படுகிறது.

அது தொடர்பாக வெளியான வீடியோவை பார்க்கும் மக்கள் இப்படி ஒரு நிலை யாருக்கும் வரக்கூடாது என்று பேசும் அளவிற்கு இந்த வீடியோவின் காட்சிகள் உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் பிவாடியைச் சேர்ந்தவர் அஜித் சிங் யாதவ். இவர் அங்குள்ள அரசு பொது பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்து வருகிறார்.


இவர் அரியானா மாநிலம் சோனிபட் வசிக்கும் சுமன் என்ற இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்துகொண்ட சிறிதுகாலம் அவரது வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருந்தது.

ஆனால் நாட்கள் செல்லச் செல்ல இளம் மனைவியின் அராஜகம் தலை தூக்கத் ஆரம்பித்தது. வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு சப்பாத்தி கட்டையால் கணவனைத் தாக்குவது, தலைமுடியை பிடித்து சுவற்றில் மோதுவது, கையில் கிடைக்கும் பொருட்களால் கண்மூடித்தனமாக கணவன் மீது எறிவது, எட்டி உதைப்பது போன்ற கொடுமைகளில் ஈடுபட்டுவந்தார்.

மனைவியின் இந்த செயல் நாளுக்கு நாள் அதிகரிக்க ஆரம்பித்தது. இதனால் விரக்தி அடைந்த தலைமை ஆசிரியர் அஜித் சிங் யாதவ் தன் மனைவி மீது குடும்ப வன்முறை மற்றும் துன்புறுத்தல் புகார் கொடுத்தார்.

ஆனால் ஆரம்பத்தில் இந்த வழக்கை போலீசார் நம்பவில்லை, ஆனால் தொடர்ந்து அஜித் சிங் மனைவி மீது புகார் கொடுத்து கொண்டே இருந்தார். காவல்துறை நடவடிக்கை இல்லாததால் ஒரு கட்டத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும் நிலைமைக்கு அவர் தள்ளப்பட்டார்.

மனைவி தன்னை தாக்குவதற்கான ஆதாரங்களை தயார் செய்ய முடிவு செய்த அஜித் சிங் தனது அறைகளில் ரகசிய கேமராக்கள் பொருத்தினார் வழக்கம் போல மனைவியின் சித்திரவதைகள் தொடர்ந்தது. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு நீதிமன்றத்தில் அஜித்தின் சிங் தனது மனைவியின் செயலை வீடியோ ஆதாரத்துடன் காட்டினார்.

அதைப்பார்த்த நீதிபதி அந்த வீடியோ காட்சிகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ராஜஸ்தானில் ஒரு பெண் இப்படி தனது கணவரை கொடூரமாக தாக்குகிறாரா என்று அந்த வீடியோவை பார்த்து நீதிமன்றமே அதிர்ந்தது.

இதுதொடர்பாக தீர விசாரித்து இருதரப்பு சாட்சிகளையும் கேட்ட நீதிமன்றம் மனைவியால் தாக்குதலுக்குள்ளாகும் பள்ளி முதல்வர், அஜித் சிங் யாதவுக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டது. தனது உயிரை காப்பாற்ற சிசிடிவி கேமராக்களை வைத்து தான் இப்போது உயிர் தப்பியதாக மள்ளி தலைமை ஆசிரியர், நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தற்போது மனைவி தாக்கியதாக அஜித் சிங் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதேபோன்ற மற்றொரு சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது மொரேனா மாவட்டத்திலுள்ள ரிடோரா அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சய் சிங், குவாலியரில் மஹல்கான் பகுதியைச் சேர்ந்த பூஜா என்பவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

சஞ்சய் மஹல்கானில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். திருமணம் நடந்து சில மாதங்கள் வரை இவர்களது வாழ்க்கை இனிமையாக இருந்தது. பிறகு படிப்படியாக இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சஞ்சய் வேலை இழந்தார் இந்த நிலையில் இருவருக்கும் இடையே சண்டை அதிகரித்தது.

சண்டை நாளடைவில் பெரிதானது பூஜா தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் சேர்ந்து கணவனை சரமாரியாக தாக்கினார். சஞ்சய் செங்கல்லால் அடித்து மிளகாய் பொடி கண்ணீர் துவி தாக்கினார்.

இந்நிலையில் அடி தாங்க முடியாத கணவன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரால் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து காவல் நிலையத்தில் விவரித்தார். இதுகுறித்து போலீசார் இரு தரப்பையும் அழைத்து விசாரித்து வருகின்றனர்.