கர்நாடகாவில்..

கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூரின் சிக்ககிரும்பியைச் சேர்ந்தவர் சேத்தன் (26). இவர் இட்டிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த வனிதா (24) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் காதலில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் காதல் ஜோடி தனிமையில் சந்தித்து உறவில் ஈடுபட்டுள்ளது. இதனால் வனிதா கர்ப்பமானார்.

இது இருவரின் குடும்பத்தினருக்கும் தெரிய வந்ததைத் தொடர்ந்து திருமண பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் வனிதாவை திருமணம் செய்துகொள்ள முடியாது என சேத்தன் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து பெண்ணின் தரப்பில் இருந்து அவருடைய சமூகத்தைச் சேர்ந்த நிர்வாகிகளிடம் கொண்டு செல்லப்பட்டது.

அப்போதும் சேத்தன் மறுப்பு தெரிவிக்கவே வனிதா அவரை கடுமையாக தாக்கியுள்ளார். அதன் பிறகு சேத்தன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். ஒருவழியாக இருவரின் பெற்றோர் முன்னிலையில் சேத்தன் – வனிதாவுக்கும் திருமணம் நடந்துள்ளது.















