காதலியை தீ வைத்து கொளுத்தி நாடகமாடிய காதலன்: பொலிஸ் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்த உண்மை!!

444

ஜப்பானில்……….

ஜப்பானில் காதலியை தீ வைத்து கொளுத்தி நாடகமாடிய நபர் பொலிஸ் விசாரணையில் உண்மை ஒப்புக்கொண்டுள்ளார்.

ஜப்பானின் கோகா நகரிலே இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் தொடர்பில் 49 வயதான மாகோடோ டோரியமி என்ற கட்டுமானத் தொழிலாளியை இபராகி ப்ரிபெக்சுரல் பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஜப்பானின் கோகா நகரில் உள்ள தனது வீட்டில் மாகோடோ டோரியமி 44 வயதான காதலியுடன் வசித்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று இருவருக்கும் இடையிலான வாக்குவாதத்தின் போது, ​​மாகோடோ டோரியமி காதலி மீத மண்ணெண்ணெய் தெளித்ததாகவும், பின்னர் ஒரு சிகரெட் லைட்டரைப் பயன்படுத்தி பற்றவைத்துள்ளார்.


பின்னர் தீயை அணைப்பதற்கும், அவசரகால சேவைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

வீட்டிற்கு பொலிசார் வந்தபோது, ​​டோரியமி ஆரம்பத்தில் தனது காதலி சமைக்கும் போது தீ பிடித்ததாக கூறியுள்ளார்.

எனினும், கொலை முயற்சி என்ற சந்தேகத்தின் பேரில் டோரியமியை பொலிசார் கைது செய்துள்ளனர். பின்னர், விசாரணையில் ஆரம்பத்தில் குற்றச்சாட்டுகளை மறுத்த அவர் கொலை செய்ய விரும்பவில்லை என்று கூறினார்.

எவ்வாறாயினும், மேலும் விசாரித்தபோது, ​​சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்று கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், தற்போது அவர் ஆபத்தான நிலையில் உள்ளார் என்று பொலிசாரை மேற்கோள் காட்டி உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.