
தங்களது மகளைக் காதலித்து திருமணம் செய்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் பெற்றோர், இளைஞரின் தாயைக் கொடூரமாக தாக்கி, அரை நிர்வாணமாக்கி, அந்த வீடியோவையும் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் தன் தரன் பகுதியைச் சேர்ந்த வாலிபர், ஒருவர் கடந்த மாதம் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதற்கு பெண்ணின் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதேவேளை, குறித்த இளைஞரின் 55 வயதுடைய தாயை ஆத்திரத்தில் உறவினர்கள் கொடூரமான முறையில் தாக்கி அரை நிர்வாணமாக்கியுள்ளனர். அந்த வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திருமணமான பெண்ணின் தாய் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணை நடந்து வருவதாகவும், மீதமுள்ள குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் மூத்த போலீஸ் சூப்பிரண்டு கபூர் தெரிவித்தார்.
இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 354 (ஒரு பெண்ணின் கோபத்தை தூண்டும் நோக்கத்துடன் ஒரு பெண்ணைத் தாக்குதல்), 354 பி, 354 டி (பின்தொடர்தல்), 323 மற்றும் 149 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவுகள் 67 மற்றும் 67-ஏ ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மூத்த போலீஸ் சூப்பிரண்டு கபூர் கூறினார். .















