கோயம்புத்தூர்..

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மதுபராயபுரத்தை சேர்ந்தவர் 22 வயதான சஞ்சய். இவர் செல்வ புரத்தைச் சேர்ந்த 20 வயதான ரமணி என்ற இளம் பெண்ணை காதலித்துள்ளார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் இவர்கள் இருவரும் கடந்த மே 8ஆம் தேதி என்று வீட்டை விட்டு வெளியேறு வேளாங்கண்ணியில் திருமணம் செய்துள்ளனர். அதற்குப் பிறகு செல்வபுரம் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இதனை அடுத்து காவல்துறையினர் இருவரின் வீட்டுக்கும் தகவல் கொடுத்து வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அப்போது ரமணி தனது கணவருடன் செல்ல விருப்பம் தெரிவித்ததால் அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்த ரமணி, எனக்கு தலை வலிக்கிறது சிறிது நேரம் தூங்கி விட்டு வருகிறேன் எனத் தெரிவித்து விட்டு வீட்டின் அழைக்கச் சென்றுள்ளார். இரவு சாப்பிடுவதற்கு நேரம் ஆகிவிட்ட காரணத்தினால் சஞ்சய் ரமணியை அழைக்கச் சென்றுள்ளார்.

அப்போது ரமணி மூச்சுப் பேச்சின்றி இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சஞ்சய், உடனே தனது மனைவியை ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ரமணியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே திருமணமான 21 நாளில் புதுப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தது அவரது உறவினர்களுக்கு இடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ரமணியின் கழுத்தில் காயங்கள் இருப்பதால் அவரது சாவில் மர்மம் இருக்கிறது என உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டனர்.

இது குறித்து விசாரணை செய்யப்பட்டு விரைவில் நடவடிக்கைகள் எடுக்காத வரை அவரது உடலை வாங்க உறவினர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்தனர்.

அதன் பின்னர் உறவினர்கள் ரமணியின் உடலை வாங்க சம்மதித்தனர். ரமணியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. ரமணியின் இறப்பு குறித்து அவரது கணவர், சஞ்சய் மற்றும் ரமணியின் தந்தை கருப்புசாமி, சஞ்சயின் தாய், தந்தை ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

முதலில் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் நினைத்துள்ளனர். பின்னர் அவரது கழுத்தில் ஆழமான காரியமும் ஆங்காங்கே சிறிது காயங்களும் இருப்பதால் காவல்துறையினருக்கு ரமணியின் இறப்பில் சந்தேகம் எழுந்துள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகு இதற்கான விவரங்கள் அனைத்தும் தெரியவரும்..

இது குறித்து தகவல் இருந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலாந்துறை காவல்துறையினர், ரமணியின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.















