நடிகை ஷீலா..
தமிழ் திரையுலகில் 2016ம் ஆண்டில் வெளியான ஆறாவது சினம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷீலா. அதன் பிறகு 2017ல் டூலெட் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வந்தது.
இதனையடுத்து மண்டேலா, திரவுபதி, நூடுல்ஸ், பிச்சைக்காரன் 2 படங்களிலும் இவரது நடிப்பு பலரது பாராட்டுக்களையும், நல்ல வரவேற்பையும் பெற்றது. மலையாளத்தில் கும்பலாங்கி நைட்ஸ் போன்ற படங்களிலும், ஜி தமிழ் தொலைக்காட்சிதொடரிலும் நடித்துள்ளார் நடிகை ஷீலா.தமிழில் மண்டேலா படம் இவர் திரைவாழ்க்கையில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.
தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் ஷீலா நடிப்பு பட்டறை நடத்தி வரும் தம்பி சோழன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நடிகை ஷீலா தனது சமூக வலைதள பக்கத்தில் திருமண உறவில் இருந்து நான் வெளியேறுகிறேன் என அதிரடியாக அறிவித்துள்ளார்.
இது குறித்து வெளியிட்ட பதிவில் நன்றியும் அன்பும் சோழன் வாலறிவன் என பதிவிட்டுள்ளார். இவர் சமீபத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது