மகாராஷ்டிரா………

மகாராஷ்டிராவில் கட்டிட திறப்பு விழாவுக்கு சென்ற போது, காரின் டயர் வெடித்து சிதறிய விபத்தில் முன்னாள் அமைச்சர் ஏக்நாத் கட்சே அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
மகாராஷ்டிராவின் ஜல்காவ் மாவட்டம் அமல்நேரில் புதிதாக கட்டப்பட்ட போலீஸ் நிலைய கட்டிட திறப்புவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கலந்துகொண்டு போலீஸ் நிலைய கட்டிடத்தை திறந்துவைத்தார்.
நிகழ்ச்சியில் முன்னாள் மந்திரியும், பாஜக-வில் இருந்து விலகி சமீபத்தில் தேசியவாத காங்கிரசில் சேர்ந்தவருமான ஏக்நாத் கட்சேயும் கலந்துகொண்டார்.

அதன்பின்னர் காரில் ஜல்காவ் நோக்கி சென்று கொண்டிருந்த போது, டயர் வெடித்து சிதறியதில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது.
எனினும் சுதாரித்துக் கொண்ட காரின் ஓட்டுநர், கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தினார், இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதுடன்,

ஏக்நாத் கட்சே உட்பட காரில் இருந்தவர்கள் உயிர் பிழைத்தனர்.















