குடிபோதையில் நண்பருடன் சேர்ந்து மனைவியை கூட்டு பலாத்காரம் செய்த கணவர்.. பரபரப்பு சம்பவம்!!

1094

கோவையில்..

கோவை ஒத்தக்கால்மண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஆதிநாராயணன். ஆக்டிங் கார் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவர் பெண் ஒருவரை காதலித்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். மேலும் ஆதிநாராயணன் குடிபோதைக்கு அடிமையாகி தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது.

இதே போல நேற்று இரவு குடிபோதையில் ஆதிநாராயணன் மற்றும் அவரது நண்பர் கார்த்திகேயன் ஆகிய இருவரும் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது மகன் தூங்க சென்ற பிறகு, ஆதிநாராயணன் குளிர்பானத்தில் மதுவை கலந்து அதை மனைவிக்கு கொடுத்துள்ளார். அதை தெரியாமல் குடித்த அவர் மயங்கியுள்ளார்.

அப்போது ஆதிநாராயணன், நண்பர் கார்த்திகேயன் இருவரும் சேர்ந்து பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மயக்கம் தெளிந்து அவர் சத்தம் போட்டதால் இருவரும் தப்பிச் சென்றனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டின் அருகே உள்ளவர்களின் உதவியுடன் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.


இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த செட்டிபாளையம் போலீசார் தலைமறைவான கணவர் ஆதிநாராயணன், அவரது நண்பர் கார்த்திக் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.