கூடப் பிறந்த தங்கைகளை அடித்தே கொலை செய்த அக்கா.. கொடூர சம்பவம்!!

280

உத்தர பிரதேசத்தில்..

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் அருகில் உள்ள பகதூர்பூர் கிராமத்தில் அக்டோபர் 8ம் தேதி 7 வயது ஷில்பி, 5 வயது ரோஷினி இருவரும் அடித்துக்கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதில் சிறுமிகளின் அக்காவான 19 வயது அஞ்சலியிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது. சிறுமிகள் இருவரையும் அடித்துக் கொன்றதை அஞ்சலி ஒப்புக்கொண்டார். தனது காதலன் அமானுடன் வீட்டில் உல்லாசமாக தனிமையில் இருந்துள்ளார்.

அதனை 2 சிறுமிகளும் பார்த்து விட்டதாகவும், பெற்றோரிடம் புகார் அளிப்பதாக இருவரும் கூறியுள்ளனர். ஆத்திரமடைந்த அஞ்சலி தனது காதலுடன் சேர்ந்து கூட பிறந்த தங்கைகளை அடித்துக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அமானை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.


இந்நிலையில், அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். காதலனுடன் சேர்ந்து 2 தங்கைகளை சொந்த அக்காவே அடித்துக் கொலை செய்த சம்பவம்அதிர்ச்சியையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.