கேரளாவில் பெண் வேடமிட்டு நேர்த்திக்கடன் செலுத்தும் ஆண்கள்.. நிஜமா இவங்க ஆண்களா?

661

கேரளாவில்..

இந்தியாவின் கேரள மாநிலம் கொல்லம் - கோட்டங்குளங்கரா பகுதியில் திருவிழாவொன்றில் சிறந்த ஒப்பனைக்காக முதல் பரிசு வென்ற, பெண் வேடமிட்ட ஆணின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு மதத்திற்கும் பல்வேறு திருவிழாக்கள் இருக்கின்றன. அவற்றில் சில திருவிழாக்கள் மதம் தாண்டி மக்களை ஒருங்கிணைக்கூடியது.

சில திருவிழாக்கள் மிகவும் வித்தியாசமாக இருக்கும். அப்படியொரு திருவிழா கொல்லம் மாவட்டத்தில் நடைபெறும் சமயவிளக்குத் திருவிழாவாகும்.


இந்தத் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். இத்திருவிழாவில் ஆண்கள் தங்கள் நேர்த்திக்கடன் நிறைவேற வேண்டி பெண் வேடமிட்டு பிரார்த்தனை செய்வார்கள். இது இந்தத் திருவிழாவின் சிறப்பம்சமாகும்.

அந்த வகையில், இந்த ஆண்டு நடந்த திருவிழாவின்போது பெண் வேடமிட்டு பிரார்த்தனை செலுத்திய ஆண் ஒருவரின் புகைப்படம் இணைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய தொடரூந்து துறை அதிகாரியான அனந்த் ரூபானகுடி என்பவர் ட்விட்டர் பக்கத்தில் இந்த சமயவிளக்குத் திருவிழா படத்தை பகிர்ந்திருந்தார்.