கொழுந்தன் உடன் தகாத உறவு… தொடர்ந்து தொல்லை.. அண்ணி எடுத்த அதிரடி முடிவு!!

1862

விழுப்புரம்….

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் தேப்பிரம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பத்மாவதி என்பவருக்கும் 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு  இரண்டு ஆண் பிள்ளைகள் மற்றும் ஒரு பெண் பிள்ளை என மூன்று குழந்தைகள் உள்ள நிலையில்,

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு முன்பு உடல்நல குறைவால் ரமேஷ்  உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் அவரது மனைவி பத்மாவதி 2 மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் தனியாக வசித்துவந்துள்ளார்.

இந்நிலையில் ரமேஷின் தம்பி சுரேஷுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக அவரது மனைவி சவுந்தரி தன் தாய் வீட்டிற்கு பிள்ளைகளுடன் சென்றுள்ளார்.


இதனால் சுரேஷ் தனது அண்ணன் வீட்டு அருகே தனியாக வசித்து வந்துள்ளார். அண்ணன் ரமேஷ் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில் தனிமையில் இருந்த அண்ணி பத்மாவதியும்,

மனைவி பிரிந்து சென்றதால் தனியாக வாழ்ந்து வந்த சுரேஷும் கடந்த 3 வருடங்களாக தகாத உறவில் இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் பற்றி சென்னையில் கூலி வேலை செய்யும் பத்மாவதியின் மூத்த மகனுக்கு தெரியவந்த நிலையில் அவர் தேப்பிரம்பட்டு கிராமத்திற்கு வராமல் சென்னையிலேயே தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார்.

இதனால் சுரேஷ் உடனான உறவை முறித்துக்கொள்ள பத்மாவதி திட்டமிட்டுள்ளார். ஆனால் சுரேஷ் தொடர்ந்து பத்மாவதிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதனிடையே கடந்த ஜூலை 29 ஆம் தேதி இரவு மது போதையில் இருந்த சுரேஷ் பத்மாவதிக்கு தொல்லை கொடுத்ததால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்ப்பட்டுள்ளது.

அப்போது சுரேஷை, பத்மாவதி மற்றும் அவரது இரண்டாவது மகன் சேர்ந்து தென்னை மட்டையால் தாக்கியதில் சுரேஷ் தலையில் காயம் அடைந்து மயங்கி விழுந்துள்ளார்.

பின்னர் அவர்களே 108 ஆம்புலன்ஸ் மூலம் சுரேஷை மீட்டு மதுபோதையில் கீழே விழுந்து விட்டதாக கூறி சேத்பட் அரசு மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிக்கிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிக்கிச்சைக்காக வேலூர் மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 2 ஆம் தேதி அவர் உயிரிழந்தார். இது குறித்த தகவலறிந்த சுரேஷின் மனைவி தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில்

புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், சுரேஷ் மது போதையில் கீழே விழுந்து தலையில் காயம் ஏற்படவில்லை என்றும், தகாத உறவை தவிர்க்க பத்மாவதி மற்றும் அவரது இரண்டாவது மகன் ஆகியோர் தென்னை மட்டையால் தாக்கியதால் சுரேஷ் மயங்கி விழுந்ததும் தெரியவந்தது.

இந்நிலையில் இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பத்மாவதி மற்றும் அவரது இரண்டாவது மகன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.