கோவிலை பூட்டிக்கொண்டு காதலிக்கு தாலி கட்டிய இளைஞன்… அதிர்ச்சியில் உறவினர்கள்!!

1679

ஆந்திராவில்..

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள புத்தாளபாளையம் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக செயலகத்தில் நாகராஜு என்ற இளைஞர் பணி செய்துவருகிறார்.

இவர் அதேபகுதியை சேர்ந்த காயத்ரி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். நெருக்கமாக காதலித்துவந்த இவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுத்தனர்.

இதனால் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவர எதிர்ப்பு கிளம்பியது. இரண்டு பேரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள். குறிப்பாக காதலி காயத்ரியின் தந்தை காவல்துறையில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்று வருகிறார்.


வழக்கம்போல் பெண் வீட்டார் தரப்பில் இருந்து எதிர்ப்பு மிகவும் கடுமையாக இருந்துள்ளது. இதனால் காதல் ஜோடிகள் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டு ஒன்றாக வாழ முடிவெடுத்தனர்.

இதனையடுத்து புத்தாளபாளையம் கிராமத்தில் உள்ள கோதண்டராமர் கோவிலுக்குத் திருமணம் செய்துகொள்ள மாலை, தாலியுடன் வந்துள்ளனர். ஆனால் அங்கும் இரு வீட்டாரும் வந்து திருமணத்தை தடுத்து நிறுத்தலாம் என அவர்கள் கருதினர்.

இதனால், கோவிலுக்குள் சென்ற இருவரும், வெளிப்பக்க இரும்பு கேட்டை இழுத்துமூடி பூட்டு போட்டுபூட்டினர். இதனையடுத்தே, மாலை மாற்றி தாலி கட்டி திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காதல் ஜோடிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு பேரையும் வெளியில் வரவழைத்துக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அதனைத்தொடர்ந்து, இரண்டு பேரின் பெற்றோர்களையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து, திருமணம் செய்து கொண்ட இரண்டு பேரும் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள்.

ஆகையால் அவர்களைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று அறிவுரை கூறி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.