சென்னையில்..

சென்னை சோழிங்கநல்லூர், காந்திநகர் ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் முத்து. இவருக்கு சரசு, புண்ணியவதி என இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு ஒரு மகன் உள்ளார். புண்ணியவதிக்கு ரமேஷ், ரஞ்சித, லட்சுமி, சந்திரா என 4 பிள்ளைகள் உள்ளனர்.

புண்ணியவதி சென்னை மாநகராட்சியில் தனியார் நிறுவனம் மூலம் தூய்மை பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில் மகள் லட்சுமியின் கணவருக்கும் புண்ணியவதிக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறி முத்து அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் இருந்த மனைவியிடம் வழக்கம்போல் கணவன் முத்து சந்தேகத்தின் அடிப்படையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கணவன் முத்து மனைவி புண்ணியவதியை கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.
தாயின் கழுத்தை தந்தை அறுப்பதை பார்த்து அதை தடுக்க முயன்ற சந்திரா என்பவருக்கு இடது கையில் பலத்த காயம் பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் 11 தையல் போட்டு வீடு திரும்பியுள்ளார்.

வீட்டு வாசலிலேயே புண்ணியவதியை கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த செம்மஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலையான பெண்ணின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய முத்துவை போலீசார் அக்கம் பக்கத்தில் எங்கு தேடியும் கிடைக்காததால், அருகில் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து,
முத்துவை முத்துவை செம்மஞ்சேரி போலீசார் கைது செய்தனர். சந்தேகத்தின் பேரில் மனைவியை கணவனே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.















