சாகும் முன் காதலிக்கு உருக்கமாக மெசேஜ்… நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் காதலன் எடுத்த விபரீத முடிவு!!

68090

கிருஷ்ணகிரி..

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே, தான் காதலித்து வந்த பெண்ணுடன் திருமணத்திற்கு நாள் குறிக்கப்பட்டு, நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், காதலியின் தாய் தகாத வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தியதால், மனமுடைந்த காதலன், வாட்ஸ் அப்பில் காதலிக்கு உருக்கமான மெசேஜ் அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் .

காதலிக்கு மெசேஜில் “நான் பிறந்திருக்கவே கூடாதுடா… நானே செத்து போய்டறேன் மா… நீ சந்தோசமா இரு” என தற்கொலைக்கு முன்பாக மெசேஜ் அனுப்பி வைத்துள்ளார்.

காதலியின் தாயாரிடம் செல்போனில் மூன்று முறைகள் பேசிய பின்னர் தான் அவர் இந்த தற்கொலை முடிவை எடுத்துள்ளதால் போலீசார் இது குறித்து விசாரிக்க வேண்டுமென சசிகுமாரின் பெற்றோர் கூறி வருகின்றனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம் கொண்டப்ப நாயனப்பள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் மாது. இவரது மகன் சசிகுமார். தனியார் செல்போன் விற்பனை கடை ஒன்றில் பணிபுரிந்து வந்த சசிக்குமாருக்கு அதே கடையில் பணிபுரிந்த ஜோன் சில்வியா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் இருவரும் காதலிக்க துவங்கினார்கள்.

இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதனால் இவர்களது திருமணத்திற்கு பெண் வீட்டார் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனாலும், மகனின் காதல் ஆசையை பூர்த்தி செய்ய நினைத்த சசிகுமாரின் பெற்றோர், பெண் வீட்டாரிடம் பேசி சம்மதம் வாங்கினார்கள்.

அதே சந்தோஷத்துடன் கடந்த 3 மாதங்களுக்கு முன் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தமும் கோலாகலமாக நடந்துள்ளது. தங்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், காதல் ஜோடிகள் சந்தோஷமாக சுற்றி திரிந்தனர்.

இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், சசிகுமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், கதறி அழுது துடித்தனர்.

‘இறப்பதற்கு முன் தனது மகன், காதலியின் தாயாரிடம் மூன்று முறைகள் போனில் பேசியுள்ளார். அதன் பிறகே தற்கொலைச் செய்து கொண்டார். அவனது இறப்புக்கு கூட காதலி உட்பட யாருமே வராதது சந்தேகத்தை மேலும் அதிகரிக்கிறது.

போலீசார் அவர்களிடம் விசாரித்து உண்மையைக் கொண்டு வர வேண்டும். கடந்த 3 வருடங்களாக பெண் வீட்டாரின் அனைத்து தேவைகளையும் என் மகன் தான் பார்த்துக் கொண்டான்’ என்று போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.