
சாத்தான் குளத்தில் பொலிசார் விசாரணையில் தந்தை மகன் கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட உயிரிழந்ததாலல் காவல்ஆய்வாளர் உட்பட 10 காவல்துறையினர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த எஸ்.ஐ. பால்துறை என்பவர் கடந்த யூலை 8ம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்பு 14ம் திகதி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், விசாரணை அதிகாரிகளும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, கடந்த மாதம் 24ம் தேதி பால்துரைக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதைத் தொடர்ந்து,

மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நீரிழிவு பாதிப்பு இருந்ததால் அவரது உடல் இன்னும் மோசமாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து, 8ம் தேதி அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்றிரவு உயிரிழந்தார்.
















