சித்தப்பாவின் தலையோடு பொலிஸ் நிலையம் சென்ற மகன்கள்: பரபரப்பை கிளப்பிய சம்பவம்..!

519

தமிழகத்தில் சித்தப்பாவின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த மகன்களால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கையின் புதுவயல் தைக்கால் தெருவை சேர்ந்தவர் யூசுப் ரகுமான்(வயது 45), இறைச்சி கடை நடத்தி வரும் யூசுப்புக்கும், புதுக்கோட்டையில் வசித்து வரும் இவரது அண்ணன் சகுபர் அலிக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது.

சுமார் 2 கோடி மதிப்பிலான சொத்து தகராறில் இருவருக்கும் அடிக்கடி பிரச்சனையும் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை எட்டு மணியளவில் யூசப்பின் கடைக்குச் சென்ற சகுபர் அலி மகன்கள் நியாஸ் மற்றும் அவரது தம்பி ரகுமான் சித்தப்பாவை அரிவாளால் தாக்கியுள்ளனர்.


பதிலுக்கு யூசுப் தாக்குதல் நடத்த, அவரை மடக்கி பிடித்து யூசுப்பின் தலையை துண்டாக்கினர், இதில் சம்பவ இடத்திலேயே யூசுப் உயிரிழந்தார். தொடர்ந்து தலையுடன் சாக்கோட்டை .பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர், விசாரணை நடைபெற்று வருகிறது.