சினிமா பாணியில் இறந்தபிறகு சிகிச்சை… அடுத்தடுத்து 2 கர்ப்பிணிகள் பலி.. திடுக்கிடும் தகவல்!!

205

மதுரை….

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் செப்டம்பர் 3 மற்றும் 7 தேதிகளில் செம்மலர் மற்றும் குப்பி இருவரும் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் இருவரும் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி அதிகாரிகள் தணிக்கை மேற்கொண்டனர். அப்போது கர்ப்பிணிகளுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படாததும் அவர்கள் இறந்த பிறகு சிகிச்சை ஆவணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

மேலும் கர்ப்பிணிகள் இறந்த பிறகு செயற்கை சுவாசம் அளித்த திடுக்கிடும் தகவலும் வெளியாகி உள்ளது. கர்ப்பிணி செம்மலருக்கு ஆகஸ்ட் 28ம் தேதி இதய சிகிச்சை நிபுணரை அழைத்ததாக மருத்துவ அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.


2 நாட்களுக்கு ஆஸ்பிரின் மாத்திரை வழங்கியதாக எழுதி இருந்தது. ஆகஸ்ட் 31ம் தேதி கர்ப்பிணி செம்மலருக்கு ரத்தம் உறையும் டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் வாந்தி எடுத்ததாகவும், வயிறு வீங்கி இருந்ததாகவும் அந்த சிகிச்சை ஆவணத்தில் சேர்க்கப்பட்டது.

மேலும் கர்ப்பிணி குப்பி இறந்த பிறகே, சிகிச்சையின் போது அளிக்கப்பட்ட மருந்துகள் விவரம், இதயத்துடிப்பு ஆய்வுகள் குறித்து சிகிச்சை ஆவணங்களில் எழுதப்பட்டிருந்தது தணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனை அடுத்து கர்ப்பிணிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஆவணங்களில் திருத்தம் செய்தவர்கள் என அனைவரையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என மதுரை ராஜாஜி மருத்துவமனை முதல்வருக்கு மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.