சிப்பிக்குள் இருக்கும் முத்துவை எடுக்கும் பெண்.. கோடிக்கணக்கான பேரை வியக்க வைத்த அறிய காட்சி..!

782

முத்து…………

சிப்பிக்குள் முத்து என்று படித்ததுண்டு கேள்விப்பட்டதுண்டு. ஆனால் நேரில் பார்க்கும் வாய்ப்பு குறைவு. பெண்கள் அணியும் ஆபரணங்களில் அழகுக்காக பயன்படுத்தப்படும் ஒரு விலையுயர்ந்த பொருள் தான் முத்து.

இயற்கையில் நீரில் வாழ்கின்ற முசெல் வகையைச் சேர்ந்த முத்துச்சிப்பி போன்ற உயிரினங்களிலிருந்து இது கிடைக்கிறது.

முத்து (Pearl) என்றதும் எமக்கு முதலில் நினைவுக்கு வருவது அரச பரம்பரையினரையே. ஏனெனில் புரதான காலத்தில் வாழ்ந்த சாதாரண மக்கள் முத்தை தமது அணிகளிளொன்றாகத் தெரிவு செய்ய முடியாத நிலைமை நீடித்தது. இதன் பெறுமதி உச்சக்கட்டத்தில் காணப்பட்டதால் மகாராணி, இளவரசி, சீமாட்டி போன்ற வர்களே முத்துக்கள் பதிக்கப்பட்ட நகைகளை அணிந்து வந்தனர் என்பது கண்கூடு.

விலை மதிப்புள்ள இந்த முத்துக்களை முத்து குளித்தல் மூலமே பெற வேண்டிய நிலைமை காணப்பட்டது என்றும் கூறலாம். ஏலவே ஆதியில் முத்துக்குளித்த நடைமுறை, முத்துக்களின் தாற்பரியம், முத்து கிடைக்கும் இடங்கள், செயற்கை முத்துக்களின் பரிணாமம் என்பன பற்றி விரிவாக ஆராய்வது இங்கு உசிதமாகும்.


நீரினுள் பரிணமித்துள்ள முத்து சிப்பிற்குள் மிகச்சிறிய திண்மப் பொருளென்று எதேச்சையாகப் புகுந்து கொண்டால் உயிருள்ள அச்சிப்பி தன் தோல் அடுக்காகிய எப்பிதீலியம் என்னும் படலத்தால் அதை நன்கு பொதிகிறது.

நாளடைவில் அச்சிப்பியில் சுரக்கும் திவம் மெல்லிய அடுக்களாக அதன் மீது படிந்து உலக மாந்தர் அனைவரும் விரும்பும் முத்தாகப் பரிணமிக்கின்றது.

இப்படி முத்துகளை பற்றி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.. குறித்த காட்சியில் பெண் ஒருவர் சிப்பிக்குள் இருந்து முத்து எடுக்கும் காட்சி அனைவரையும் ஆச்சர்ய படுத்தியுள்ளது.