சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் 90 வயது மாஜி தாசில்தார் ‘பெடல் கார்’ கண்டுபிடித்து சாதனை!!

892

மதுரை………..

மதுரை அருகே கூடக்கோவில் கிராமத்தைச் சேர்ந்தவர் ரத்னம் (90). இவர் ஓய்வுபெற்ற தாசில்தார். இவர் தற்போது மதுரை அண்ணாநகரில் வாழ்ந்து வருகிறார்.

இவர் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பெடல் கார் ஒன்றை வடிவமைத்து சாதனை படைத்துள்ளார். இந்த காரை மதுரை அருகே கொசவபட்டி அரசு பள்ளிக்கு இலவசமாக கொடுத்துள்ளார்.

இதுகுறித்து ரத்னம் கூறுகையில், ‘‘பள்ளிப்படிப்பை மதுரை செயின்ட் மேரீஸ் பள்ளியிலும், பட்டப்படிப்பை அமெரிக்கன் கல்லூரியிலும் முடித்தேன். 1950ல் வருவாய்த்துறை பணியில் சேர்ந்து, தாசில்தாராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத காரை கண்டுபிடித்து அரசு பள்ளிகளுக்கு வழங்கும் ஆசை ஏற்பட்டது.


இதன்பேரில் ரூ.25 ஆயிரம் செலவில் பெடலில் இயங்கும் காரை வடிவமைத்தேன். இந்த பெடல் காரை ஓட்டுவதற்கு 2 பேர் வேண்டும். இதில் 6 முதல் 8 மாணவர்கள் பயணிக்கலாம். மேலும் கூடுதல் பெடல் கார்கள் தயாரித்து அரசு பள்ளிகளுக்கு வழங்குவேன்’’ என்று கூறினார்.