சொத்துக்கு ஆசைப்பட்டு கள்ளக்காதல் ஜோடி செய்த கொடூரம்… இறுதியில் ஜோடியாக களி திண்ணும் பரிதாபம்!!

1485

திருவண்ணாமலை…

திருவண்ணாமலை மாவட்டத்தில் தச்சம்பட்டு பகுதியில் இருக்கும் காப்பு காட்டு வனப்பகுதியில் பாதி எரிந்த நிலையில் பெண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து தச்சம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கின்றனர்.

இதன் பின்னர் கொலை செய்யப்பட்டவர் யார் என்பது குறித்த விசாரணையில் விஜயா என்பது தெரியவந்திருக்கிறது. 65வயதான இந்த மூதாட்டி சொந்த பந்தம் யாரும் இல்லாமல் அவர் தனியாக வசித்து வந்தது தெரிய வந்திருக்கிறது.

திருவண்ணாமலை பே கோபுரம் அஞ்சாவது தெருவில் தனியாக வசித்து வந்துள்ளார் என்பதும் தெரிய வந்திருக்கிறது. இந்த விஜயாவை கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணையில் காஞ்சனா- ஞானவேலு இருவரும் சிக்கியிருக்கிறார்கள்.


இந்த கள்ளக்காதல் ஜோடி தான் இந்த மூதாட்டியை கொலை செய்து காட்டில் கொண்டு வந்து போட்டு மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தது தெரிய வந்திருக்கிறது. சொத்துக்காக இந்த கொலையை செய்ததும் தெரிய வந்திருக்கிறது.

விஜயா வசித்து வந்த அதே பகுதியில் ஆட்டோ ஓட்டுனர் ஞானவேலு வசித்து வந்திருக்கிறார். கணவனை இழந்த காஞ்சனா என்பவர் விஜயா வீட்டில் வாடகைக்கு வசித்து வந்திருக்கிறார்.

காஞ்சனாவுக்கும் ஞானவேலுக்கும் கள்ள உறவு இருந்து வந்திருக்கிறது. கடந்த சில மாதங்களாக காஞ்சனா சரியாக வாடகை கொடுக்காமல் இழுத்தடித்து கொண்டிருந் திருக்கிறார்.

வீட்டின் உரிமையாளர் விஜயா வாடகை கேட்டு தொந்தரவு செய்து வந்திருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தான் சொந்த பந்தம் யாரும் இல்லாமல் தனியாக வாழும் விஜயாவை கொன்றுவிட்டு,

சொத்தை அபகரிக்க கள்ளக்காதலனுடன் சேர்ந்து திட்டமிட்டு இந்த கொலையை செய்திருக்கிறார் காஞ்சனா. கைது செய்யப்பட்ட காஞ்சனாவும் கள்ளக்காதலன் ஞானவேலுவும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.