ஜேர்மன் நதி ஒன்றில் காணப்படும் மர்மப்பொருள்: குழம்பும் மீனவர்கள்!!

348

மர்மப்பொருள்…

ஜேர்மன் நதி ஒன்றில் காணப்படும் ஒரு மர்மப்பொருள் மீனவர்களை குழப்பமடையச் செய்துள்ளதோடு, குதிரைகளை அச்சமுறச்செய்துள்ளது.

கடினமான செதில்களை உடைய ஒரு விலங்கைக் கண்டதாக தெரிவித்துள்ள மீனவர்கள், அதன் வாலைப் பார்க்கும்போது அது ஒரு முதலையாக இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.

பெண் ஒருவர் தனது குதிரை நதியோரமாக மேய்ந்துகொண்டிருந்ததாகவும், வாயை அகலமாக திறந்தபடி உட்கார்ந்திருந்த ஒரு இரண்டு மீற்றர் நீளமுடைய முதலை ஒன்றைக் கண்டு தன் குதிரை அரண்டு ஓட, உடனே அந்த முதலையும் தண்ணீருக்குள் சென்று மறைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இப்படி பல புகார்கள் தொடர்ந்ததையடுத்து, நேற்று பொலிசாரும் உள்ளூர் தீயணைப்பு வீர்ரகளும் தெர்மல் இமேஜ் கமெரா ஒன்றுடன் படகில் சென்று நதியில் முதலையை தேடினர்.


ஒரு ஹெலிகொப்டரும் ட்ரோனும் நதியின் 12 கிலோமீற்றர் தூரத்திற்கு தேடுதல் வேட்டை நடத்தின. என்றாலும் முதலை எதையும் கண்டுபிடிக்கமுடியவில்லை.

எனவே, என்ன செய்வதென தெரியாமல், நதியில் நீந்துவதற்கும் மீன் பிடிப்பதற்கும் அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

அடுத்த கட்டநடவடிக்கைகள் தொடர்பாக இன்று அதிகாரிகள் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.