டிக் டாக்கை விற்க வழங்கப்பட்ட காலக்கெடுவை மேலும் நீட்டிக்க முடியாது – டிரம்ப் அதிரடி!

294

டிக் டாக்….

டிக் டாக்கின் அமெரிக்கச் செயல்பாட்டு உரிமையை மாற்றுவதற்கான காலக்கெடுவை மேலும் நீட்டிக்க முடியாது என அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துவிட்டார்.

சீனாவைச் சேர்ந்த பைட் டான்ஸ் நிறுவனத்தின் டிக் டாக் செயலியால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறி இந்தியா தடை செய்தது. இதேபோல் அமெரிக்காவிலும் தடை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது.

இதனால் செப்டம்பர் 15ஆம் நாளுக்குள் அமெரிக்காவில் டிக் டாக்கின் செயல்பாட்டை அமெரிக்க நிறுவனத்துக்கு விற்க வேண்டும் அல்லது நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என அதிபர் டிரம்ப் கெடு விதித்தார்.


டிக் டாக்கை விலைக்கு வாங்குவதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சு நடத்தினாலும் இதுவரை எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இந்நிலையில் டிக் டாக்கை விற்க வழங்கப்பட்ட காலக்கெடுவை மேலும் நீட்டிக்கப்போவதில்லை என அதிபர் டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.