கர்நாடகாவில்..

கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் அமைந்துள்ளது எல்லாபூர் என்ற கிராமம். இங்கு இமானுல் சித்தி என்ற 40 வயது நபர் வசித்து வருகிறார். இவருக்கும் யசோதா என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி ஒன்றாக வாழ்ந்துவ வருகின்றனர்.
கணவன் – மனைவி இரண்டு ஆண்டுகளாக கார்காலா தாலுகா நல்லூர் ஹூரலடியில் உள்ள மும்பை ஹோட்டல் உரிமையாளர் ரகுவீர் ஷெட்டி என்பவரது தோட்டத்தில் தங்கி கூலி வேலைசெய்து வந்தனர்.

இந்த தம்பதிக்கு சலுவ் (11), ஐரின் (10) என்ற இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், அவர்கள் அந்த பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தனர். இந்த சூழலில் கணவன் – மனைவிக்குள் கடந்த சில மாத காலமாகவே சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இருப்பினும் அது பெரிய சண்டையாக மாறாமல் வாக்குவாதத்தோடு நின்று கொண்டது.

எனினும் சம்பவத்தன்று இருவருக்குள்ளும் கடும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த மனைவி யசோதா வீட்டை விட்டு வேகமாக ஓடிச்சென்று அருகில் இருந்த ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
மனைவி பின்னாலே ஓடி சென்று அவரை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் அதற்குள்ளும் மனைவி குதித்து விட்டத்தால், அவரை மீட்கும் முயற்சியில் கணவரும் ஏரிக்குள் குதித்துள்ளார். ஆனால் இருவருமே நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானர்.

இதில் கணவர் இமானுல் சித்திக்கு நீச்சல் தெரிந்த போதிலும், அவரும் நீரில் மூழ்கி பரிதபமாக உயிரிழந்தார். இதையடுத்து இந்த நிகழ்வு குறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து நீரில் மூழ்கி கிடந்த சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். தொடர்ந்து இதுகுறித்து குழந்தைகளிடமும் விசாரித்தனர்.

அப்போது சம்பவத்தன்று கணவன் – மனைவிக்குள் டிவி தொடர்பாக சண்டை ஏற்பட்டுள்ளது. அதாவது குடும்ப கஷ்டம் காரணமாக டிவியை விற்கப்போவதாக கணவர் இமானுல் சித்தி சில நாட்களாக கூறி வந்துள்ளார்.
அதற்கு மனைவி யசோதா எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். சம்பவத்தன்றும் அதேபோல் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது தெரியவந்தது.

இதையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டிவியை விற்கப்போவதாக கூறியதால் கணவன் – மனைவிக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக ஏரியில் விழுந்த மனைவியை காப்பாற்ற சென்ற கணவரும் உயிரிழந்துள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.















