தந்தை கண்முன்னே துடிதுடித்து பலியான சிறுவன்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

660

தமிழ்நாட்டில்..

தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் காரியாப்பட்டி என்ற இடத்தில் தந்தை ஓட்டி வந்த வாகனத்தில் சிக்கி மகன் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. காரியாபட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி மற்றும் கார்த்திகைச் செல்வி தம்பதிகளின் மகனான பால்ராஜிற்கே இந்த சம்பவம் நடந்துள்ளது.

இவர்கள் இருவரும் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணிகளை செய்து தான் மூன்று மகன்களை படிக்க வைத்து வந்துள்ளார்கள். அந்தவகையில் 2 இளைய மகன்களுடன் திருச்சுழி சாலையில் உள்ள ஒரு வீட்டில் செப்டிக் டேங்க்கை சுத்தம் செய்து வீட்டிற்கு செல்லும் வழியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இவர்களின் இரண்டாவது மகள் வாகனத்தின் முன்பக்கமும் இளைய மகள் பின்புறமும் அமர்ந்து வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக பால்ராஜ் தவறி கீழே விழுந்ததில், வாகனத்தின் பின்சக்கரம் ஏறி, பால்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.


தகவலறிந்த காரியாபட்டி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.