தன்னை சீண்டியவரிடம் விடாமல் சண்டை செய்த சிங்கப் பெண்! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

491

பஞ்சாப்………..

பஞ்சாப் மாநிலத்தில் சிறுமி ஒருவர் சாலையில் செல்லும் போது அவரின் கையடக்க தொலைபேசியை பிடுங்க முயன்றவர்களுடன் சண்டையிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மொஹல்லாவில் வசிக்கும் குசும்குமாரி (15) என்னும் சிறுமி வீட்டிற்கு செல்லும் போது பைக்கில் வந்த இருவர் கையடக்க தொலைபேசியை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது பின் இருந்தவரின் டி-ஷர்ட்டைப் பிடித்து சிறுமி இழுத்துள்ளார். பின்னர் அவர்கள் சிறுமியை தாக்கியுள்ளனர்.

எனினும், சிறுமி தொடர்ந்து அவரைப் பின்தொடர்ந்து பிடித்துள்ளார். பின்னர் அவரை பைக்கிலிருந்து இழுத்துச் சாலையில் போட்டுள்ளார். உடனே அப்பகுதி மக்கள் ஓடி வந்து சிறுமிக்கு உதவி செய்துள்ளனர்.


தற்போது காயமடைந்த 15 வயது சிறுமி ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

மேலும் பிடிபட்ட கொள்ளையன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.