தம்பதிகளுக்கு மொட்டை அடித்து செருப்பு மாலை அணிவித்த கொடுமை! கண்கலங்க வைக்கும் காட்சி…!

686

தம்பதிகளுக்கு மொட்டை………………

உத்திரபிரதேசத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதிகளை பாதி மொட்டையடித்து, செருப்பு மாலை அணிவித்து அவர்களை துன்புறுத்திய காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

சாலையில் முட்டி போட வைத்து, இவ்வாறு அரங்கேற்றியுள்ள கொடுமை பிரபலங்கள் உட்பட அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இவர்கள் காதல் திருமணம் செய்துள்ளதாகவும், சிலர் வேற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவ்வாறான தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறுகின்றனர். சுற்றிலும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மக்கள் கூட இதனை தடுக்காமல் நின்றுள்ளனர்.


இக்காட்சியினை அவதானித்த சாந்தனு, விஷ்னு விசால் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.