தம்பியின் கொலைக்கு பழிவாங்கிய அண்ணன் : நடுரோட்டில் அரங்கேறிய கொடூரம்!!

488

திருச்சி..

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருகே உள்ள கொள்ளிடம் கிளிக்கூடு கிராமத்தில் வசித்து வந்தவர் பிரகாஷ் (23). இவர் கடந்த 2020ம் ஆண்டு தனது நண்பர்கள் மதியழகன்,

ஆனந்த் ஆகியோருடன் சேர்ந்து, அதே பகுதியை சேர்ந்த அறிவழகன் என்பவரை முன் விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்துள்ளனர். இதனால் பிரகாஷ் குடும்பத்தினருக்கும், அறிவழகன் குடும்பத்தினருக்கும் இடையே பகை அதிகரித்து முன் விரோதம் தொடர்ந்துள்ளது.

இந்நிலையில், நள்ளிரவு வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்த பிரகாஷை, கொலையுண்ட அறிவழகனின் பெரியப்பா மகன் அசோக் மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு பேரும் சேர்ந்து அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர்.


இதில் ரத்த வெள்ளத்தில் விழுந்த பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கொள்ளிடம் போலீசார், பிரகாஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து கொள்ளிடம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.