தாயுடன் கள்ள உறவில் இருந்த ஆண்கள் : கிராமத்தையே அலறவைத்த மகள் : நடந்தது என்ன?

86619

ஆந்திரா..

ஆந்திர மாநிலத்தில் திருப்பதி மாவட்டத்தில் சந்திரகிரி அருகே உள்ளது புதிய சேனம் பட்டிலா என்கிற கிராமம். இந்த கிராமத்தில் 19 வயதான கீர்த்தி தனது தாயுடன் வசித்து வந்திருக்கிறார். தாய்க்கு அதே கிராமத்தைச் சேர்ந்த பல ஆண்களுடன் கள்ள உறவு இருந்து வந்ததால் அந்த கிராமத்தில் அதற்கு மேல் வாழ பிடிக்காமல் வேறு எங்காவது சென்று விடலாம் என்று முடிவு எடுத்து இருக்கிறார் .

அதற்கு தாய் சம்மதிக்காததால் தனது தாயை பயமுறுத்த வேண்டும் என்பதற்காக வீட்டில் இருந்த பீரோவுக்கு தீ வைத்திருக்கிறார். இந்த தீ விபத்தில் வீட்டில் பீரோவுக்குள் இருந்த 35 ஆயிரம் ரூபாய் பணத்தில் 2500 ரூபாய் பணம் முழுவதுமாக எரிந்து சாம்பல் ஆகி இருக்கிறது.

பில்லி, சூனியம் வைத்து விட்டார்கள் என்று அக்கம் பக்கத்தினரும் அச்சப்படுத்தி இருக்கிறார்கள். அதன் பின்னர் கீர்த்தியின் தாய் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு நாள் அவரின் சேலை தீப்பற்றி எரிந்து இருக்கிறது. இதுவும் கீர்த்தி செய்த வேலை தான். பின்னர் அந்த தீயை அணைத்து உயிரை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார் அந்தப் பெண்.


அப்போதும் யாரோ பில்லி, சூனியம் வைத்து விட்டார்கள் என்று பூசாரி, மந்திரவாதிகளை அழைத்து வந்து பூஜைகள் செய்து இருக்கிறார்கள். இத்தனை செய்தும் தன் அம்மா ஊரை விட்டு கிளம்ப முடிவு எடுக்காததால் , தன் அம்மாவுடன் பழகியவர்களின் வீடுகள் மற்றும் வைக்கோல் போர்களுக்கு தீ வைத்து வந்திருக்கிறார் கீர்த்தி.

இதனால் பயந்து போன கிராம மக்கள் தங்கள் கிராமத்திற்கே யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டதாக மந்திரவாதிகள், பூசாரிகளை அழைத்து வந்து பூஜை செய்வது, ஆடுகளை பலியிட்டு நரபலி கொடுப்பது என்று செய்து வந்திருக்கிறார்கள். ஆனால் பிரச்சனை மட்டும் தீர்ந்தபாடில்லை.

இதன் பின்னர் இந்த விவகாரம் போலீசுக்கு சென்றிருக்கிறது. போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து அந்த கிராமத்தை கண்காணித்து பலரையும் அழைத்து விசாரணை நடத்தி வந்த போது தான் கீர்த்தி சிக்கி இருக்கிறார். அவரிடம் நடத்திய விசாரணையில் நடந்ததைச் சொல்லி இருக்கிறார். இதன் பின்னர் அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.