தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

301

சென்னையில்..

சென்னை கீழ்ப்பாக்கம் டி.பி சத்திரம் ஏழாவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் தாமோதரன். இவர் அதே பகுதியில் பெயின்டராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சுமதி. இவர்களுக்கு சிந்து(21)என்ற மகள் இருந்தார். இளம்பெண் சிந்து, செயின்ட் தாமஸ் கல்லூரியில் எம்.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் வீட்டில் எந்த வேலைகளையும் செய்வதில்லை என சிந்துவை அவரது தாயார் கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது. இதே போன்று நேற்றும் வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் இருந்த சிந்துவை அவரது தாய் சுமதி, அடித்ததாக தெரிகிறது. இந்நிலையில், மதியம் சுமதி ரேஷன் கடைக்குப் பொருட்கள் வாங்க சென்றுள்ளார்.

அவர் ரேஷன் கடையில் பொருட்களை வாங்கி விட்டு, வீட்டிற்கு திரும்பிய போது,மகள் தூக்கில் தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிந்துவை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.


அங்கு சிந்துவைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதனையடுத்து பெற்றோர் அளித்த தகவலின் பேரில் டி.பி சத்திரம் போலீஸார். சிந்துவின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு, சிந்துவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தற்கொலைக்கு முன்பு சிந்து எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர்.அதில் தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என எழுதப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் சிந்து தற்கொலை குறித்து அவரது பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.