
கொரோனா காரணமாக வேலையிழந்து தவித்த இளைஞர் ஒருவர் தாய் வீட்டிலேயே நகைகளை திருடிய சம்பவம் நடந்துள்ளது.
புதுச்சேரி அரியாங்குப்பம் மாதா கோவில் வீதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவரும், இவரது மனைவியும் கைப்பை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.

கடந்த 15ம் தேதி இவர்கள் சொந்த வேலை காரணமாக வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று உள்ளனர்.
திரும்பி வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 12 பவுன் நகைகள் திருடு போய் இருந்தன, இதனால் அதிர்ச்சியடைந்த ரமேஷ்குமார் தம்பதியினர் பொலிசில் புகாரளித்தனர்.

உடனடியாக பொலிசார் நடத்திய விசாரணையில், எந்தவொரு கதவும் உடைக்கப்படாமல் இருந்தது கண்டறியப்பட்டது.
எனவே அருகில் இருந்தவர்கள் நகையை திருடியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்ததில், அவர்களது மகனே திருடியது தெரியவந்தது.

அதாவது கள்ளச்சாவி போட்டு பீரோவில் இருந்த நகைகளை திருடியுள்ளார், கொரோனால் வேலையிழந்து கஷ்டப்பட்டதால் தாயின் வீட்டிலேயே திருடியதாக குற்றத்தையும் ஒப்புக்கொண்டாராம்.















