திகிலூட்டும் சம்பவம்… 14 வயது சிறுவனின் கழுத்தில் முழங்காலை அழுத்திய பொலிசார்: கொந்தளித்த மக்கள்!!

268

ஸ்பெயின்……….

ஸ்பெயின் நாட்டில் பொதுமக்கள் மத்தியில் 14 வயது சிறுவனின் கழுத்தில் முழங்காலை அழுத்திய பொலிசாரின் நடவடிக்கை கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயினின் மிராண்டா டி எப்ரோ என்ற நகரப்பகுதியிலேயே செவ்வாய் அன்று குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பாதிப்புக்கு உள்ளான குறித்த சிறுவன் பொதுயிடத்தில் மாஸ்க் அணியவில்லை என்றே கூறப்படுகிறது.

இதனையடுத்து அங்கிருந்த பொலிசார் சிறுவனை மடக்கிப்பிடித்ததுடன், தரையில் முகத்தை அழுத்தியதுடன், பொலிசார் ஒருவர் சிறுவனின் கழுத்தில் முழங்காலை அழுத்தியுள்ளார்.

கூடியிருந்த சிலர், பொலிசாரிடம் கழுத்தை நெரித்து விடாதீர்கள் என குரல் எழுப்புவது வெளியான காணொளியில் பதிவாகியுள்ளது. சிலர், பொலிசாரின் அந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்த்துள்ளதுடன், இது துஸ்பிரயோகம் எனவும் தெரிவித்துள்ளனர்.


ஆனால் பொதுமக்களின் கண்டனக் குரல்களை கண்டுகொள்ளாத பொலிசார், அவர்களின் கடமையில் கருத்தாக இருந்துள்ளனர். இதனிடையே, பொலிசார் ஒருவர் குறித்த சிறுவனின் தாயார் என கருதப்படுபவரிடம், சிறுவன் தொடர்பான ஆவணங்களை கோரியுள்ளார்.

ஒரு நாளுக்கு முன்னர் மாட்ரிட் நகரில் மாஸ்க் அணியாத இளம்பெண் ஒருவரை மடக்கிப்பிடித்த பொலிசார், அவரை கைது செய்த பின்னர் பொலிஸ் வாகனத்தில் அவரது தலையை மோதவிடுவது போன்ற காணொளி ஒன்று வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.