திருப்பூரில்..

திருப்பூர் காலேஜ் ரோட்டில் மளிகை கடை நடத்தி வரும் இளைஞர் ஒருவர் தனது, 26 வயது மனைவி மற்றும் குழந்தையை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து இளம்பெண்ணின் செல்போன் எண் சிக்னலை ஆய்வு செய்து அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

சென்போன் சிக்னல் நாகர்கோவிலில் இருப்பது போன்று காட்டியது. இதனையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து இளம்பெண், குழந்தையை மீட்க நாகர்கோவில் விரைந்தனர். அங்கு அவரை ஒரு இளைஞருடன் போலீசார் கண்டுபிடித்து, இருவரையும் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளி வந்து போலீசாரையே அதிர வைத்தது. நாகர்கோவிலை சேர்ந்த ராம் (எ) ராமச்சந்திரன் (36) என்பவர், பேஸ்புக்கில் இளம்பெண்ணுடன் அறிமுகமானார். பின்னர் இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்ட நிலையில், ராம் பேச்சில் மயங்கி திருமணமான இளம்பெண் அவரின் வலையில் வீழ்ந்தார்.

எனக்கு இன்னும் திருமணமாகவில்லை, எனக்கு பெற்றோர் இல்லை, மிகவும் வறுமையில் இருப்பதாக அப்பெண்ணிடம் ராம் கூறியுள்ளார். இதனால் அப்பெண் ராமுக்கு பண உதவிகளைச் செய்து வந்தார். பின்னர் செல்போனில் பேசியபடி பழக்கம் அடுத்தக் கட்டதுக்கு சென்றது. இருவரும் செல்போனிலேயே ஆபாச பேச்சு பேசி மிகவும் நெருக்கமானர்.

பின்னர் இளம்பெண்ணை காதலிப்பதாகவும், சேர்ந்து வாழ விரும்புவதாகவும் கூறினார். ஆனால் இளம்பெண் இதனை மறுத்து விட்டார். ஆனால் தன்னிடம் ஆபாச உரையாடல் உள்ளதாகவும், அதனை கணவருக்கு அனுப்பி விடுவேன் எனக் கூறியுள்ளார். மேலும் உன் கணவரை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்து போன இளம்பெண் குழந்தையுடன் நாகர்கோவிலுக்கு சென்று இளைஞருடன் சேர்ந்துள்ளார். அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். அப்பெண் கொண்டு வந்த நகை, பணம் உள்ளிட்டவைகளைப் பறித்து கொண்டு மது குடிக்க பழக்கிக் கொடுத்து உல்லாசம் அனுபவித்துள்ளார். பின்னர் இளம்பெண்ணை குழந்தையுடன் வீட்டில் சிறை வைத்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து போலீசார் அவரைக் கைது செய்து அவர் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது, இதே போன்று தமிழகம் முழுவதும் 10க்கும் மேற்பட்ட பெண்களிடம் பேஸ்புக்கில் பழகி உல்லாசம் அனுபவித்து நகை, பணத்தை பறித்த அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. குறிப்பாக பெண்களிடம் நெருக்கமாக பேசி அவர்களின் பலவீனங்களை அறிந்து கொள்கிறார். பின்னர் அதனை வைத்து மிரட்டி நினைத்ததை சாதிப்பது விசாரணையில் அம்பலமானது.

ராமச்சந்திரன் இது போல் முகநூல் மூலமாக மேலும் பல பெண்களிடம் பழகியதும் தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு முறையும் பெண்களிடம் பேசி அவர்களை தனியாக அழைத்துச் சென்று நகை, பணத்தை பறித்து செலவு செய்துவிட்டு பின்னர் அவர்களை பலாத்காரம் செய்து விட்டு அப்படியே விட்டு விட்டு சென்றுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஏற்கனவே ஒரு பெண்ணை ஏமாற்றிய புகாரில் ராம் சிறை சென்று வந்ததும் அம்பலமானது. ராம் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதும், இவருடன் கருத்து வேறுபாட்டால் மனைவி, குழந்தையுடன் அவரை பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. அதன்பின் தனிமையில் இருந்த ராம் தனது காம லீலைகளை தொடங்கியுள்ளார். இதனையடுத்து அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.















