திருமணமான பெண்ணுடன் முறையற்ற உறவு! 25 வயது இளைஞனுக்கு நேர்ந்த துயரம்: தீர்த்து கட்டிய கணவன்!!

581

தமிழகத்தில் திருமணமான பெண்ணுடன் முறையற்ற உறவில் இருந்த 25 வயது இளைஞன், கணவனால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை சேர்ந்தவர் ரகுவரன் (30). கூலி தொழிலாளியான இவர் மகாலட்சுமி(27) என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ரகுவரன் குடிக்கு அடிமையானவர் என்பதால், அடிக்கடி குடித்து வந்து மனைவி மகாலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனால் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு மகா லட்சுமி, கணவரை பிரிந்து குழந்தைகளுடன் சென்னை வந்து, திருவொற்றியூரில் உள்ள உறவினரான ராஜூவின் மகள் பத்மபிரியா வீட்டில் தங்கி துணிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

அப்போது, ராஜூவின் மூத்த மகனான விக்னேஷ் (25) என்பவருடம் மகா லட்சுமி பழகியுள்ளார். இவர்களின் பழக்கம் நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு மாறிய்து. இந்தநிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக 4 மாதங்களுக்கு முன்பு மகாலட்சுமி, குழந்தைகளுடன் திண்டிவனம் சென்று ரகுவரனுடன் வசித்துள்ளார். அங்கிருந்தும் செல்போனில் விக்னேஷுடன் அவ்வப்போது பேசி வந்துள்ளார்.


நேற்று முன்தினம் போனில் பேசும்போது, உன்னை பார்க்க வேண்டும் என்று மகாலட்சுமி கூற, உடனே விகனேஷும் அவரின் கணவர் மற்றும் குழந்தைகள் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். ஆனால், சில நிமிடங்களில் வெளியே சென்றிருந்த ரகுவரன் திரும்பியதால், இருவரும் அரைகுறை ஆடையுடன் இருப்பதை கண்டு ஆத்திரமடைந்த அவர் வீட்டில் இருந்து கத்தியை எடுத்து மகாலட்சுமியை குத்த முயன்றார்.

விக்னேஷ் தடுக்க வந்ததால், அவர் மீது சரமாரியாக கத்தி குத்து விழ, அதே இடத்தில் விக்னேஷ் துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார், ரகுவரை கைது செய்தனர். அப்போது, ரகுவரன் வாக்குமூலத்தில், சென்னைக்கு வேலைக்கு சென்ற எனது மனைவி மகாலட்சுமிக்கு உறவினரான விக்னேஷுடன் முறையற்ற உறவில் இருந்தாள்.

நான் அவளை கண்டித்தேன். ஆனால் நேற்று முன் தினம் காலை எனது வீட்டிற்கு வந்த விக்னேஷ் மனைவியுடன் உல்லாசமாக இருந்ததைக் கண்டு, என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை, ஆத்திரத்தில் மனைவியை கத்தியால் குத்த முயன்றேன். ஆனால் விக்னேஷ் தடுத்ததால் அவரது முதுகில் கத்திக்குத்து விழுந்தது என்று கூறியுள்ளார்.