திருமணமான 2 மாசத்துல மனைவி நான்கு மாத கர்ப்பம்.. ஆத்திரத்தில் கணவன் செய்த செயல்!!

19634

தமிழகத்தில்…

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கீழ் அனுவம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (29). சிலம்பரசனுக்கும் சீர்காழியைச் சேர்ந்த ரோஜா (25) வுக்கும் கடந்த மே மாதம் 4ம் தேதி பெற்றோர்கள் நிச்சயித்து திருமணம் நடைபெற்றது. கடந்த மூன்று வருடங்களாக சிலம்பரசன் துபாயில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார்.

திருமணமானதும் சொந்த ஊரில் வசித்து வந்த சிலம்பரனுக்கும், ரோஜாவுக்கும் திருமணமான இரண்டு மாதங்களிலேயே குடும்பத்தில் பிரச்சனை எழுந்துள்ளது. இந்நிலையில், நேற்றும் ரோஜாவுக்கும், சிலம்பரசனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில்,

ஆத்திரத்தில் சிலம்பரசன், தனது கையில் இருந்த பிளேடால் ரோஜாவின் கழுத்தை அறுத்துள்ளார். வலி தாங்க முடியாமல், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்தப்படி ரோஜா உயிரிழந்து கீழே சரிந்து விழுந்தார்.


அதன் பின்னர், சிலம்பரசன், கிள்ளை காவல் துறையினரிடம் நடந்த சம்பவம் குறித்து தொிவித்து சரண் அடைந்தார். கிள்ளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் தலைமையிலான போலீசார்,

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரோஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலைத் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சிலம்பரசனிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண்,

கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கொலைச் செய்யப்பட்ட ரோஜா, 4 மாத கர்ப்பமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.