இந்தியாவில்…..

இந்தியாவில் திருமணமான 2 மாதத்தில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன் பொலிசில் சரணடைந்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஹர்ஷ் சர்மா. இவரும் அனுஷு (22) என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் சில நாட்களாக இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்ட வந்தது. நேற்று முன் தினம் புதுமணத்தம்பதி இடையே சண்டை முற்றியது.
அப்போது ஆத்திரமடைந்த சர்மா அனுஷு கழுத்தை இரும்பு சங்கிலியை கொண்டு நெரித்து கொல்ல முயன்றார்.

ஆனால் அவரால் கொல்ல முடியவில்லை, இதையடுத்து சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து வந்த சர்மா மனைவியை அங்கேயே வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
இரத்த வெள்ளத்தில் மனைவி சடலமாக கிடக்க காவல் நிலையத்துக்கு சென்ற சர்மா அங்கு பொலிசில் சரணடைந்ததோடு நடந்த அனைத்தையும் வாக்குமூலமாக அளித்துள்ளார்.

இதை தொடர்ந்து அனுஷு சடலத்தை கைப்பற்றிய பொலிசார் கொலையாளியிடம் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.















