திருமணமான 2 மாதத்தில் காட்டில் தலை இல்லாமல் கிடந்த அழகிய இளம்பெண்ணின் உடல்! கணவனே கொன்றது அம்பலம்.. பகீர் பின்னணி!!

477

இந்தியா……….

இந்தியாவில் திருமணமான 2 மாதத்தில் மனைவியை கொடூரமாக கொலை செய்து தலையை தனியாக வெட்டியெடுத்த கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் வாரணாசியை சேர்ந்த இசாஸ் அகமது என்ற இளைஞனும், ப்ரியா சோனியும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கலப்பு திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்துக்கு பின்னர் ப்ரியா மதம் மாறினால் தான் அவரை வீட்டில் ஏற்று கொள்வோம் என அகமதின் குடும்பத்தார் கூறிவிட்டனர்.


இது தொடர்பில் அகமது தனது மனைவி ப்ரியாவை வலியுறுத்திய போதிலும் அவர் மதம் மாற சம்மதிக்கவில்லை. இதனால் மனைவி மீது கோபம் கொண்ட அகமது தனது நண்பர் ஷோயிப் உதவியுடன் அவரை கொலை செய்ய முடிவெடுத்தார்.

அதன்படி ப்ரியாவை இருவரும் சேர்ந்து கொலை செய்து தலையை தனியாக வெட்டி எடுத்தனர். பின்னர் உடலை மட்டும் காட்டுப்பகுதியில் தூக்கி போட்டனர். ஆனால் பொலிசார் ப்ரியாவின் தந்தை மற்றும் சகோதரி உதவியுடன் சடலமாக கிடந்தது ப்ரியா தான் என்பதை கண்டுபிடித்து அவர் உடலை மீட்டனர்.

ப்ரியா உடுத்தியிருந்த உடைகள், ஷூ மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அவரின் தலை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனிடையில் இந்த சம்பவம் தொடர்பாக அகமது, ஷோயிப் ஆகிய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.