திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

6404

சென்னையில்..

சென்னை ஆர்.கே.நகர் சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜேஸ்வரி. இவருக்கு வயது 19. இவருடைய கணவர் வடிவேல். இவர் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 6 மாதத்துக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

காதலிக்கும் போது சுமூகமாக இருந்த உறவு திருமணமான பிறகு அடிக்கடி தகராறு உருவானது. ராஜேஸ்வரிக்கும், வடிவேலுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் ராஜேஸ்வரி கணவரிடம் கோபித்துக் கொண்டு எண்ணூர் சுனாமி குடியிருப்பில் உள்ள தந்தை வீட்டுக்கு சென்று விட்டார். திருமணம் ஆகி 6 மாதத்திலேயே கணவருடன் சண்டை போட்டுவிட்டு வீட்டுக்கு வந்து விட்டாயே? என ராஜேஸ்வரியை அவருடைய தந்தை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ராஜேஸ்வரி கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.


அவருடைய தந்தை அதிர்ச்சி அடைந்து அங்கு இருந்த மீனவர்களுடன் சேர்ந்து கடலில் விழுந்த மகளை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை ராஜேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த ராஜேஸ்வரியின் அண்ணன் ராஜேஷ் தனது நண்பர்களுடன் ஆர்.கே.நகரில் உள்ள வடிவேல் வீட்டுக்கு சென்றார்.

என் தங்கை ராஜேஸ்வரி சாவுக்கு நீ தான் காரணம்” என்று கூறி நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால் வடிவேலின் தலையில் வெட்டினார். மேலும் சரமாரியாக அடித்து உதைத்து இடது கையையும் உடைத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

வடிவேலின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.