திருமணம் மீறிய உறவு…. ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனுக்கு அரங்கேறிய கொடூரம்!!

843

சேலம்…..

சேலம், மேட்டூரை அடுத்த ஜலகண்டாபுரம் அருகே மலையம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தறித் தொழிலாளி சுந்தர்ராஜ். இவருக்கு கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சேலம் குகை பகுதியைச் சேர்ந்த நிவேதா என்பவருடன் திருமணம் நடந்தது.

இந்தத் தம்பதிக்கு ஏழு வயதில் மகன் இருக்கிறார். இந்த நிலையில் கடந்த 17-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு சுந்தர்ராஜ் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்தார்.

இது தொடர்பாக பெங்களூரிலுள்ள சுந்தர்ராஜின் குடும்பத்தாருக்கு நிவேதா தகவல் தெரிவித்தார். வீட்டுக்கு வந்த சுந்தர்ராஜ் குடும்பத்தார், மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்து ஜலகண்டாபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

இதைத் தொடர்ந்து வழக்கு பதிவுசெய்த போலீஸார் சுந்தர்ராஜ் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.


பிரேத பரிசோதனை அறிக்கையில் சுந்தர்ராஜ் கழுத்து இறுகாமல், மூச்சு திணறி இறந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நிவேதாவை காவல் நிலையம் அழைத்து வந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில், ஜலகண்டாபுரம் ஆவலத்தூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவருடன் நிவேதாவுக்குப் பழக்கம் ஏற்பட்டு தொடர்ந்து செல்போனில் பேசிவந்திருக்கிறார்.

இதைக் கண்டித்த கணவர் சுந்தர்ராஜ், செல்போனைப் பறித்து வைத்துக்கொண்டார். இதையடுத்து, கணவரைத் தீர்த்துக்கட்ட தன்னுடைய ஆண் நண்பருடன் சேர்ந்து திட்டம் தீட்டியிருக்கிறார்.

கடந்த 17-ம் தேதி இரவு நிவேதா தூக்க மாத்திரை கலந்த உணவை கணவருக்குக் கொடுத்து தூங்கச் செய்திருக்கிறார். பின்னர் தினேஷை வீட்டுக்கு வரவழைத்து தலையணை மூலம் முகத்தில் அழுத்தி சுந்தர்ராஜைக் கொலைசெய்திருப்பதாக போலீஸாரிடம் தெரிவித்திருக்கிறார்.

நிவேதா கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் தற்கொலை வழக்கை கொலை வழக்காக பதிவுசெய்த ஜலகண்டாபுரம் போலீஸார் ஆண் நண்பர் தினேஷ், கொலைக்கு உடந்தையாக இருந்த நிவேதாவின் தோழி வித்யா ஆகிய மூன்று பேரையும் அதிரடியாகக் கைதுசெய்தனர். மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் போலீஸார் அடைத்தனர்.