திருமண நிகழ்வில்..

கொட்டதெனியாவ பிரதேசத்தில் மண்டபத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்ட பெண் உ.யிரிழந்துள்ளார். உ.யிரிழந்த பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கோவிட் வைரஸ் தொற்றியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருமண பந்தத்தில் இணைந்த புதுமணத்தம்பதியை தனிமைப்படுத்தவதற்கு திவுலபிட்டிய சுகாதார வைத்திய அலுவலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

உ.யிரிழந்தவர் மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த 76வயதுடைய பெண் ஒருவராகும் உ.யிரிழந்த பெண் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க உதவிய 8 பேரும் திருமணத்திற்கு வந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.















