தூங்கும் போது இயக்குனர் செய்த செயல்.. மானம்போச்சு மரியாதை போச்சு என புலம்பிய பிரபல நடிகை!!

1453

மஹிமா நம்பியார்..

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து பின் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் விஜய் ஆண்டனி. பல ஹிட் படங்களை கொடுத்து வரும் விஜய் ஆண்டனி தற்போது தமிழரசன், அக்னிச் சிறகுகள், காக்கி, கொலை, பிச்சைக்காரன் 2, மழை பிடிக்காத மனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்தும் ஷூட்டிங்கை முடித்தும் இருக்கிறார்.

அதேபோல் இயக்குனர் சிஎஸ் அமுதன் இயக்கத்தில் ரத்தம் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகை மஹிமா நம்பியார் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். படத்தின் படக்குழுவினர் இணையத்தில் செய்யும் அட்ராசிட்டி தாங்கமுடியவில்லை.

அப்படி மஹிமா நம்பியார் காரில் வாயைப்பிளந்த வண்ணம் தூங்கியுள்ள புகைப்படத்தினை சிஎஸ் அமுதன் அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, கடினமாக உழைக்கும் உழைப்பாளிக்கு நிகராக ரத்தம் படத்தின் நடிகர்கள் கூட இப்படித்தான் இருக்கிறார்கள்.


மஹிமா நம்பியார் அவரது வரிகளை எப்படி கற்றுக்கொள்கிறார் பாருங்கள் என்று பதிவிட்டுள்ளார். இதற்கு விஜய் ஆண்டனி, அவங்க உழைப்பை பார்க்கும் போது என்னையே பாக்குறமாதிரி இருக்கு என்று பதிவிட்டுள்ளார்.

இதையெல்லாம் பார்த்த மஹிமா, அய்யோ, என் ஸ்டைல் போச்சு மானம் போச்சு மரியாதை போச்சு எல்லாமே போச்சு என்று கதறிய ஒரு ரியாக்ஷனை கொடுத்துள்ளார்.