தொடர்பைத் துண்டிக்க நினைத்த கள்ளக்காதலி.. இளம்பெண்ணை 17 முறை கத்தியால் குத்திய காதலன்!!

113

பெங்களூருவில், தனியார் சொகுசு ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து இளம்பெண்ணுடன் தங்கியிருந்த காதலன், தனது கள்ளக்காதலி,

தகாத உறவுக்கு தொடர்ந்து சம்மதிக்காததால் ஆத்திரத்தில் 17 முறை கத்தியால் குத்திக் கொலைச் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காதலனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பெங்களூருவைச் சேர்ந்த தாசே கவுடாவுக்கு ஹரிணி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன், ஹரிணிக்கு அதே பகுதியில் டெக்னீஷியனாக பணிபுரிந்து வரும் யஷாஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில், இருவரும் ஜோடியாக ஊர் சுற்றியதுடன், அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.

இது குறித்து கணவர் தாசே கவுடாவுக்கு தெரியவர, மனைவியை எச்சரித்து, மனைவியிடம் இருந்து செல்போனை பிடுங்கி, வீட்டுச் சிறையில் வைத்திருந்துள்ளார்.

இந்நிலையில், சில மாதங்களுக்கு பிறகு வெளியே வந்த ஹரிணி, தனது கள்ளக்காதலன் யஷாஸ்சை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தன்னுடனான கள்ளக்காதல் உறவைக் கைவிடும் படி கூறியிருக்கிறார்.


இந்நிலையில் இருவரும் கடந்த 6ம் தேதி மீண்டும் சந்தித்து, பெங்களூரு பூர்ணா பிரக்யா லே-அவுட் பகுதியில் உள்ள சொகுசு ஹோட்டலில் அறை எடுத்து உல்லாசமாக இருந்துள்ளனர்.

அதன் பின்னர் கள்ளக்காதலை கைவிடும்படி ஹரிணி மீண்டும் வாக்குவாதம் செய்த நிலையில், தான் கொண்டு சென்றிருந்த கத்தியால், ஹரிணியை அடுத்தடுத்து 17 முறை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து யஷாஸ் தலைமறைவானார்.

வெகுநேரமாக அறை திறக்கப்படாததால் இது குறித்து ஹோட்டல் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கூறினர். சம்பவ இடத்திற்கு சென்ற சுப்பிரமணியபுரா போலீசார்,

கொலைச் செய்யப்பட்டு சடலமாக கிடந்த ஹரிணியின் உடலை மீட்டு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு விசாரணையைத் துவங்கினர். பின்னர் யஷாஸை கைது செய்து விசாரித்ததில், ஹரிணி என்னை தவிர்த்ததால் கொலை செய்ததாக போலீசாரிடம் கூறியுள்ளார்.