ஐஸ்வர்யா ராஜேஷ்..

லாக்கப் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சார்லஸ் இயக்கத்தில் உருவாகிவரும் சொப்பன சுந்தரி படத்தின் ஹீரோயினாக நடித்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர். டார்க் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கின்றது. இந்த படத்தின் புரமோஷன் வீடியோக்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியானது.

இந்நிலையில் இந்த படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்தது இதுகுறித்த புகைப்படமும் சமீபத்தில் வெளியானது. தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்தால்தான் முன்னணி நடிகை என்ற நிலை இருக்கும்போது முன்னணி நடிகர்கள் பலருடன் நடிக்காத நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமா ரசிகர்கள் பலராலும் அறியப்பட்ட முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

காரணம் இவருடைய கதை தேர்வு என்பதுதான் இவர் நடிக்க கூடிய அனைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகின்றன. இவர் நடிப்பில் 10 படங்கள் வெளியாகிறது என்றால் நிச்சயமாக 8 படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த வெற்றி படங்களாக அமைகின்றன.தமிழ் சினிமாவின் ராசியான நடிகை என்ற பெயரை எடுத்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

சமீப காலமாக ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் டிரைவர் ஜமுனா என்ற படத்தில் நடித்திருந்தார். தற்பொழுது சொப்பன சுந்தரி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இப்படி தொடர்ந்து ஹீரோயின் சப்ஜெக்ட்டில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு படவாய்ப்புகள் குறைந்து வருகின்றது.

இது ஒரு பக்கம் இருந்தாலும் கூட தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கும் இவர் தற்போது தன்னுடைய தொடை அழகை எடுப்பாக தெரிய இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

















