நடுரோட்டில் காதலியை பெட்ரோல் ஊற்றி எரித்த கள்ளக்காதலன்!!

478

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே ஆனேக்கல் தாலுகா மல்லனசந்திரா கிராமத்தில் வசித்து வருபவர் விட்டல்(52).

டிரைவராக பணிபுரிந்து வரும் இவருடைய முதல் மனைவி உயிரிழந்த பின்பு 2வது ஒரு பெண்ணை திருமணம் செய்திருந்தார். அந்த பெண்ணுக்கு வேறொருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு, கள்ளக்காதலனுடன் ஓடிவிட்டார்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வனஜாக்‌ஷி (26) என்ற இளம்பெண்ணுடன், விட்டலுக்கு பழக்கம் ஏற்பட்டது. வனஜாக்‌ஷிக்கு ஏற்கெனவே திருமணமாகி அவரது கணவர் உயிரிழந்திருந்தார்.

இருவருக்கும் இடையேயான பழக்கம் காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்யாமலேயே மல்லனசந்திரா கிராமத்தில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.

வனஜாக்‌ஷி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகத்தில் அடிக்கடி செல்போனில் ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார். தந்தை வயதான தனது காதலன் விட்டலுடன் சேர்ந்து சில வீடியோக்களை வானஜாக்‌ஷி வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி, பன்னரகட்டாவில் இருந்து பசவனபுராவை நோக்கி ஒரு நபருடன் வனஜாக்‌ஷி காரில் சென்றார். இது குறித்த தகவலின் பேரில் விட்டல் காரில் அவரை பின்தொடர்ந்து சென்றார்.


குறிப்பிட்ட பகுதியில் வனஜாக்‌ஷி சென்ற காரை, விட்டல் தடுத்து நிறுத்தினார். அங்கு வனஜாக்‌சியுடன் விட்டல் சண்டை போட்டதாக தெரிகிறது. அவர்களுக்குள் வாக்குவாதமும் உண்டானது.

இதில் ஆத்திரமடைந்த விட்டல், திடீரென தன்னுடைய காரில் கேனில் இருந்த பெட்ரோலை எடுத்து தப்பி ஓட முயற்சித்த வனஜாக்‌சியை மடக்கி பிடித்து, நடுரோட்டில் வனஜாக்சி மீது பெட்ரோலை ஊற்றி, சிகரெட் லைட்டர் மூலம் தீ வைத்தார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த கொடூரத்தில் நடுரோட்டில் அலறியபடியே கதறிய வனஜாக்‌ஷியின் உடலில் பிடித்த தீயை, அவரது நண்பரும், அங்கிருந்தவர்களும் அணைத்தார்கள்.

மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து போலீசார் தகவலறிந்த போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள விட்டலை தேடி கைது செய்துள்ளனர். போலீசாரின் விசாரணையில், விட்டலுடன் கடந்த சில ஆண்டுகளாக வனஜாக்‌ஷி வசித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக அவருக்கும், வேறொரு நபருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விட்டலுடன் பேசி பழகுவதை வனஜாக்‌ஷி தவிர்த்து வந்துள்ளார்.

இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே இருவருக்கும் இடையே தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது. அவருடன் வனஜாக்‌ஷி காரில் செல்வதை கண்டு ஆத்திரமடைந்த விட்டல், நடுரோட்டில் வனஜாக்‌சியை உயிருடன் எரித்துக் கொலை செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.