நடுவீதியில் இளம் பெண்ணுக்கு தம்பியின் கண்ணெதிரே நடந்த சோகம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

441

சென்னை..

சென்னை போரூரைச் சேர்ந்தவர் ஷோபனா (22). கூடுவாஞ்சேரி பகுதியில் இருக்கும் சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில், என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார்.

சென்னை முகப்பேரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இவரது தம்பி அரிஷ்(17) 12ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் காலை நேரத்தில், தனது தம்பியை பள்ளியில் விடுவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் ஷோபனா அழைத்து சென்றுக் கொண்டிருந்தார்.

இவர்கள் சென்றுக் கொண்டிருந்த வாகனம், தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலை வழியாக திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் அருகே கடந்து கொண்டிருந்த போது, பின்னால் இருந்து வந்த வேன் ஒன்று இவர்களை முந்தி சென்ற போது, இவர்களது வாகனத்தின் மீது உரசியது.


அதில் அக்கா, தம்பி இருவரும் நிலைத்தடுமாறி கீழே ரோட்டில் விழுந்தனர். இவர்களுக்குப் பின்னாலேயே மணல் ஏற்றிக் கொண்டு வந்த லாரி, ஏறி இறங்கியதில் சக்கரத்தில் சிக்கிக் கொண்ட ஷோபனா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இந்த விபத்தில் ஷோபனாவின் தம்பி அரிஷ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உயிரிழந்த ஷோபனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். சாலை விபத்தில் தம்பி கண் முன்னே அக்கா உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.