நண்பனின் 14 வயது மகளை சீரழித்த அரசு உயர் அதிகாரி.. இறுதியில் நேர்ந்த சோகம்!!

831

14 வயது சிறுமியை..

அக்டோபர் 2020 முதல் பிப்ரவரி 2021 வரையிலான ஐந்து மாத காலப்பகுதியில் தனது நண்பரின் மகளான 14 வயது சிறுமியை பலமுறை பிரேமோதய் காக்கா பாலியல் வன்கொடுமை செய்த நிலையில், அச்சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார்”.

நண்பரின் 14 வயது மகளை பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த டெல்லி அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அதிகாரியை சஸ்பெண்ட் செய்து அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியின் தந்தை கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபரில் மரணம் அடைந்த நிலையில் டெல்லி அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் துணை இயக்குநர் பொறுப்பில் இருந்த பிரமோதய் கக்கா மற்றும் அவரது குடும்பத்தினர் உடன் வசித்து வந்தார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையும், பிரமோதய் கக்காவும் நண்பர்களாக இருந்தவர்கள்


அக்டோபர் 2020 முதல் பிப்ரவரி 2021 வரையிலான ஐந்து மாத காலப்பகுதியில் தனது நண்பரின் மகளான 14 வயது சிறுமியை பலமுறை பிரேமோதய் காக்கா பாலியல் வன்கொடுமை செய்த நிலையில், அச்சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார்.

இது குறித்து கக்காவின் மனைவியிடம் அச்சிறுமி தெரிவித்த நிலையில், இந்த விஷயத்தை மூடிமறைக்க கருக்கலைப்பு மாத்திரைகளை சிறுமிக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.

கடும் மன உளைச்சலுக்கு அச்சிறுமி ஆளான நிலையில் அவரது தாயார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். சிறுமிக்கு உளவியல் சிகிச்சை அளிக்கப்பட்டது, அப்போது போது அவர் தனது தந்தையின் நண்பரான அவர்,

“மாமா” என்று அழைக்கப்படும் ஒருவரிடமிருந்து மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமைகளை எதிர்கொண்டதைப் பற்றி மருத்துவர்களிடம் கூறினார். டாக்டர்கள் போலீசாரிடம் இது குறித்து கூறிய நிலையில் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் பிரமோதய் கக்காவை சஸ்பெண்ட் செய்த முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இது குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

சிறுமியின் உடல் நிலை இன்னும் சீராகத நிலையில் குணமடைந்த உடனே மாஜிஸ்டேட் விசாரணைக்கு அழைத்து செல்லப்படுவார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.